அந்தரத்தில் மின்னல் வேகத்தில் பறந்த கார், இறுதியில் நேர்ந்த கோரசம்பவம், வைரலாகும் பதறவைக்கும் வீடியோ உள்ளே.!
terrific car accident in race
சீனாவின் மக்காவு மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தய போட்டியில்,கார்ஒன்று பறந்து வந்து சிதறிய விபத்து காண்போர் அனைவரையும் பதற வைத்துள்ளது.
சீனாவின் மக்காவு மாகாணத்தில் மகாவ் கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தய போட்டியானது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பார்முலா 3 கார் பந்தய போட்டியின் மூலம் மிகவும் பிரபலமான, ஜெர்மனி சேர்ந்த சோபியா ஃப்ளோரெச் 17 வயது இளம்பெண் போட்டியில் கலந்து கொண்டு கார் ஓட்டினார்.
அப்பொழுது 280 கிமீ வேகத்தில் கார் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார், தடம் மாறி ஜப்பான் வீரர் ஷோ சுபோய் கார் மீது பலமாக மோதி அந்தரத்தில் பறந்தது.
பின்னர் வேகமாக பறந்து வந்த கார் தடுப்பில் மோதி நொறுங்கி சிதறியது. இந்த கட்சியை கண்டபார்வையாளர்கள் அனைவரும் அனைவரும் பதறிப்போனர்.மேலும் உடனே பந்தய தளத்திற்கு விரைந்த பாதுகாவலர்கள் விபத்தில் சிக்கிய சோபியாவை மீட்டு உடந்தையாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் சோபியா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "நான் நன்றாக இருக்கிறேன் என்று எல்லோருக்கும் தெரியப்படுத்த விரும்புகிறேன். ஆனால் நாளை திங்கள் காலை அறுவை சிகிச்சைக்கு செல்ல உள்ளேன்... விரைவில் மற்ற தகவல்களை தெரிவிக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
மேலும் இந்த வீடியோ வைரலாகி பார்ப்போரை பதற வைத்துள்ளது.