சோமாலியாவில் பயங்கர குண்டுவெடிப்பு பயங்கரவாத அமைப்பு பொறுப்போற்பு...14 பேர் உயிரிழந்தனர்...!
சோமாலியாவில் பயங்கர குண்டுவெடிப்பு பயங்கரவாத அமைப்பு பொறுப்போற்பு...14 பேர் உயிரிழந்தனர்...!
சோமாலியாவில் தீவிரவாத அமைப்பினர் நடத்திய குண்டுவெடிப்பு தாக்கதலில் மந்திரி உட்பட 14 பேர் உயிரிழந்தனர்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில், அல்கொய்தா திவிரவாத அமைப்புடன் தொடர்புடைய அல்ஷபாப் என்ற திவிரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த பயங்கரவாத அமைப்பு சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட சோமாலிய அரசை கவிழ்க்க முயற்சி செய்து வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டின் இராணுவம் மற்றும் பொதுமக்களை குறிவைத்து இந்த திவிரவாத அமைப்பு அடிக்கடி வன்முறை தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் அப்பாவி பொதுமக்கள் பலர் பலியாகி வருகின்றனர்.
இந்நிலையில், அந்நாட்டின் ஹிர்ஷபெல்லி மாகாணம் ஜவ்ஹர் நகரில் உள்ள தனியார் ஹோட்டல் அருகே, பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடத்தில் இன்று பயங்கர குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாகுதலில் ஹிர்ஷபெல்லி மாகாண சுகாதாரத்துறை மற்றும் பெண்கள் விவகாரங்கள் துறை மந்திரி உயிரிழந்துள்ளதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த குண்டுவெடிப்பு தாக்குதலிக்கு அல்கொய்தா திவிரவாத அமைப்புடன் தொடர்புடைய அல்ஷபாப் திவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. மேலும் இந்த தாக்குதலுக்கு அந்த நாட்டு அதிபர் கண்டனம் தெரிவித்துள்ளார்.