பேங்காக் சுற்றுலா சென்ற சென்ற பிரபல நடிகை, ஆற்றில் மூழ்கி பலி.. கண்ணீரில் ரசிகர்கள்.!
பேங்காக் சுற்றுலா சென்ற சென்ற பிரபல நடிகை, ஆற்றில் மூழ்கி பலி.. கண்ணீரில் ரசிகர்கள்.!
நண்பர்களுடன் பேங்காக் நாட்டிற்கு சுற்றுலா சென்ற நடிகை, அதிவேக படகில் பயணம் செய்தபோது ஏற்பட்ட விபத்தில் பலியாகினார்.
தாய்லந்து நாட்டினை சேர்ந்த நடிகை நிடா பட்சரவீராபோங் (Nida Patcharaweeraphong) 37 வயது. இவர் தனது நண்பர்கள் 5 பேருடன் பேங்காக் நாட்டிற்கு இன்பசுற்றுலாவுக்கு சென்றுள்ளார். அங்கு நண்பர்களுடன் சவோ பிரயா (Chao Phraya) ஆற்றில் அதிவேக படகில் பயணம் செய்துள்ளார்.
அப்போது, எதிர்பாராத விதமாக வேகமாக சென்ற படகு விபத்திற்குள்ளாகவே, அனைவரும் நீரில் விழுந்து தத்தளித்துள்ளனர். நடிகை நிடாவும் நீரில் விழுந்து தத்தளித்த நிலையில், அவரின் நண்பர்கள் மட்டும் படகை பிடித்து மேல் வந்துள்ளனர். நிடா காணவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்தவர்கள் உள்ளூர் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் நிடாவை தேடியும் பலனில்லை. இதனால் 30 நீர்மூழ்கு வீரர்கள் வரவழைக்கப்பட்டு, அவரின் உடல் தேடப்பட்டது. கடந்த பிப். 24 ஆம் தேதி நீரில் விழுந்த நடிகை நிடாவின் உடல், பிப். 26 ஆம் தேதி இரவில் கண்டறியப்பட்டுள்ளது.
இதன்பின்னரே அவரின் மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. நிடா நீச்சல் பயிற்சி பெற்றவர் என்பதால், அவர் நீதி கரைசேர்ந்து இருக்கலாம் என்று ஆற்றின் இருக்கரையிலும் அதிகாரிகள் தேடுதல் வேட்டை நடத்திய நிலையில், அவரின் உடல் ஆற்றின் அடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அவரின் குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.