ஒரே வருடத்தில் 39 முறை ஃபோன் செய்து ஆம்புலன்ஸை வரவைத்த நபர்!! என்ன காரணம்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..
ஒரே வருடத்தில் 39 முறை ஃபோன் செய்து ஆம்புலன்ஸை வரவைத்த நபர்!! என்ன காரணம்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..
பொய்யான காரணம் கூறி இலாசவ ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்திய நபரை மருத்துவமனை நிர்வாகம் கண்டித்துள்ளது.
மிகவும் அவசரமான தருணங்களில் பயன்படுத்தவே ஆம்புலஸ் சேவை வழங்கப்படுகிறது. அவசரத்திற்கு மட்டுமே ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்த வேண்டும் என்பதும் மக்கள் அனைவர்க்கும் தெரிந்த ஒன்றே. ஆனால் தனது சொந்த வேலைக்காக ஆம்புலஸ் சேவையை தவறாக பயன்படுத்தியுள்ளார் தைவான் நாட்டை சேர்ந்த நபர் ஒருவர்.
தைவான் நாட்டில் ஆம்புலன்ஸ் சேவை இலாசவசமாக வழங்கப்பட்டுவருகிறது. இதனை பயன்படுத்திக்கொள்ள விரும்பிய நபர் ஒருவர், ஒரு வருடத்திற்கு சுமார் 39 முறை ஆம்புலன்ஸ் சேவையை அழைத்து இருக்கிறார். குறிப்பிட்ட மருத்துவமனை ஒன்றின் அருகில் தான் அந்த நபரின் வீடு இருக்கிறது.
வீட்டிலிருந்து தனது ஏரியாவில் இருக்கும் சூப்பர் மார்கெட்டிற்கு சென்று பர்ச்சேஸை முடித்த பின்னர் மீண்டும் நடந்து செல்ல சோம்பேறி பட்டுள்ள அந்த நபர், ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு காரணத்தை கூறி இலாசவாச ஆம்புலன்ஸ் சேவையை அழைத்துள்ளார்.
ஆம்புலன்ஸ் வந்ததும் அதில் ஏறி மருத்துவமனை செல்லும் அவர், ஆம்புலன்சில் இருந்து இறங்கியதும் மருத்துவமனைக்குள் செல்வது போல போக்கு காட்டி விட்டு மருத்துவரையும் பார்க்காமல், டெஸ்ட் எதுவும் எடுக்காமல் அப்படியே வீட்டுக்கு சென்றுள்ளார்.
இதனை கவனித்துவந்த மருத்துவமனை நிர்வாகம், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை அடுத்து, போலீசார் அந்த நபரை அழைத்து விசாரித்துள்ளனர். இதில் மேலும் கொடுமையான விஷயம் என்னவென்றால், குறிப்பிட்ட நபரின் வீடும், அவர் சென்றுவரும் சூப்பர் மார்கெட்டிற்கு இடையே உள்ள தூரம் வெறும் 200 மீட்டர் தான் அதாவது 0.2 கிமீ தான். இந்த தூரத்தை நடந்துவர முடியாமல்தான் அந்த நபர் ஆம்புலன்ஸை பயன்படுத்தியுள்ளார்.