1 ஆண்டு, 2 ஆண்டு அல்ல 2500 ஆண்டுகள் பழமையான மம்மி திறப்பு... வைரலாகும் வீடியோ.!
சுமார் 2500 வருடங்கள் பழமையான மம்மியை கடந்த சனிக்கிழமை பார்வையாளர்கள் பலரின் முன்னிலையில் திறந்த வீடியோ காட்சி இணையத்தில் வெகுவாக பரவி வருகிறது.
எகிப்தில் தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் சுமார் 2500 வருடங்கள் பழமையான மம்மியை கடந்த சனிக்கிழமை பார்வையாளர்கள் பலரின் முன்னிலையில் திறந்த வீடியோ காட்சி இணையத்தில் வெகுவாக பரவி வருகிறது.
எகிப்தின் மெம்ஃபிஸ் என்ற இடத்தில் சக்யுரா என்ற பகுதியில் தான் எகிப்தியர்களின் மிகப்பழமையான கல்லறை உள்ளது. அந்த கல்லறையில் போதகர்கள், உயர் சமூகத்தை சேர்ந்தவர்கள் மற்றும் தலைவர்களின் உடல்களை வைத்திருந்தனர்.
எகிப்தின் சுற்றுலா மற்றும் தொல் பொருள் ஆராய்ச்சி அமைச்சகம் இந்த பகுதியிலிருந்து 59 சவப்பெட்டிகளை தொல் பொருள் ஆராய்ச்சிக்காக எடுத்துள்ளனர். அதில் 2500 வருடங்கள் மிகப்பழமையான சவப்பெட்டியை கடந்த சனிக்கிழமை பார்வையாளர்கள் பலரின் முன்னிலையில் திறந்த வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.