×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வடகொரியாவில் இணையதளத்தில் தகவல் தேடிய அதிகாரிக்கு மரண தண்டனை விதித்த அதிபர்..!!

வடகொரியாவில் இணையதளத்தில் தகவல் தேடிய அதிகாரிக்கு மரண தண்டனை விதித்த அதிபர்..!!

Advertisement

வடகொரியாவின் அதிபராக கிம் ஜாங் உன் உள்ளார். தற்போது அவர் தலைமையிலான சர்வாதிகார ஆட்சி நடந்து வருகிறது. 

வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் தனது அதிரடியான நடவடிக்கைகளால் உலக நாடுகளின் பேசு பொருளாக இருந்து வருகிறார்.  அவரையும், வடகொரியாவைப் பற்றியும் யாரும் அவ்வளவு எளிதாக அறிந்து கொள்ள முடியாது. அந்த அளவிற்கு அந்நாட்டில் கட்டுப்பாடுகள் அதிகம்.

கிம் ஜோங் உன் தன் நாட்டை மிகவும் பலமுள்ள நாடாக காட்டிக் கொள்வதற்காக அவ்வப்போது வடகொரியாவில் ஏவுகனை சோதனை நடத்துவது வழக்கம். இதனால் அமெரிக்காவின் கண்டனத்திற்கு அடிக்கடி ஆளாகி வருகிறார். ஆனால் கிம் ஜோங் உன் இதைப்பற்றி எல்லாம் ஒரு போதும் கவலைப்பட்டதில்லை. தன் தந்தையின் நினைவு தினத்தன்று நாட்டு மக்கள் யாரும் சிரிக்க கூடாது என்று சட்டம் போட்டவர் கிம் ஜோங் உன்.

வடகொரியாவில் சிறு குற்றங்களுக்கு கூட அதிகபட்ச தண்டனை வழங்கப் பட்டு வருகிறது. அவரை எதிர்ப்பவர்கள் மற்றும் அரசுக்கு எதிராக சதி செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது. வெளியுலகம் பற்றி வடகொரியாவில் இருக்கும் மக்கள் தெரிந்து கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது. சினிமா, நாடகங்கள் போன்ற எந்த பொழுதுபோக்கு அம்சங்களும் வடகொரியாவில் கிடையாது.

வெளிநாடுகளில் இருந்து சி.டி. கேசட்களை கடத்தி தான் பார்க்க வேண்டும். அதுவும் வெளியே தெரிந்தால் தேசத்துரோக குற்றமாக கருதப்படும். மேலும் அதற்கும் மரண தண்டனை வரை வழங்கப்படும். அதுபோல அந்த நாட்டை பற்றிய எந்த தகவல்களும் வெளியுலகுக்கு தெரிவிக்கப்படுவது இல்லை.

அங்கு பொதுமக்கள் இணையத்தை பயன்படுத்த அனுமதி இல்லை. அரசு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான அதிகாரிகளுக்கு மட்டுமே இணையத்தை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கும் பல கட்டுப்பாடுகள் உள்ளது. அதாவது அவர்கள் இணையத்தில் என்ன தேடுகிறார்கள் என்பதை கண்காணிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு அவ்வப்போது அரசுக்கு அறிக்கை அனுப்பும்.

இந்நிலையில், உளவுத்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் அண்மையில் அதிபருக்கு அளிக்கப்பட்ட அறிக்கையில் அவரைப் பற்றிய தகவல்களை இணையத்தில் தேடியதாக தெரிவிக்கப்பட்டது. இதில் அதிபர் கிம் ஜோங் உன், அவருக்கு மரண தண்டனை வழங்கி உத்தரவிட்டார். இணையத்தில் தன்னைப் பற்றிய விபரங்களை தேடியதற்காக நாட்டின் உயர் பதவியில் இருக்கும் உளவுத்துறை அதிகாரி ஒருவருக்கு மரண தண்டனை வழங்கியுள்ளது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#world #North Korea #President #Searched for information on the Internet #Official #Death penalty
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story