பெருநாட்டில் வெடித்த வன்முறை.. கட்டுப்படுத்த முடியாமல் திணறும் அரசாங்கம்..!
பெருநாட்டில் வெடித்த வன்முறை.. கட்டுப்படுத்த முடியாமல் திணறும் அரசாங்கம்..!
தென் அமெரிக்க நாடான பெருவில் அரசுக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்தது. பெருநாட்டில் அதிபராக இருந்த காஸ்டிலோ பதவி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இவர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து இவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து காஸ்டிலோவை விடுதலை செய்யக்கோரியும் தற்போது அதிபராக பதவி வகித்து வரும் அதிபர் டினா பொலுவார்ட் பதவி விலக வலியுறுத்தியும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் இதுவரை 34 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் ஜூலியாக்கா நகரில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததன் காரணமாக காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியும், புகைகுண்டுகளை வீசியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்து வருகின்றனர்.