அமெரிக்காவா? தமிழ்நாடா?.. அமெரிக்காவாழ் தமிழர்கள் கொடுத்த வரவேற்பில் இன்ப வெள்ளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
அமெரிக்காவா? தமிழ்நாடா?.. அமெரிக்காவாழ் தமிழர்கள் கொடுத்த வரவேற்பில் இன்ப வெள்ளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் அமெரிக்காவுக்கு சென்று தொழில் முதலீடுகளை தமிழ்நாட்டுக்கு ஈர்த்து வரும் நிலையில், இன்று சிகாகோ நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, அமெரிக்காவில் இருக்கும் தமிழர்களிடையே உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "அமெரிக்காவில் இருந்தாலும், நான் தமிழ் மண்ணில் இருப்பது போல இருக்கிறது. தமிழ்நாட்டின் முதல்வராக, திமுக தலைவராக நான் கலந்துகொண்டபோது அளிக்கப்படும் உற்சாகத்தைவிட, இங்கு கூடுதல் உற்சாகம் மற்றும் மகிழ்ச்சி ஏற்படுகிறது. எனக்கு அப்படித்தான் இருக்கிறது. தமிழ் மண்ணில் கிடைக்கும் உணர்வு எனக்கு இருக்கிறது.
இதையும் படிங்க: டேட்டிங் போகும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் லீவு; அசத்திய தாய் நிறுவனம்.!
உங்களில் ஒருவனாக, உங்களின் குடும்பத்தில் ஒருவனாக நான் மகிழ்ச்சி அடைகிறேன். தொழில்துறையில் முதலீடுகளை ஈர்க்க அமீரகம், ஜப்பான், சிங்கப்பூர், ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு சென்றுவிட்டு, தாமதமாக நான் இங்கு வந்துள்ளேன். லேட்டா வந்தாலும், வரவேற்பு என்பது லேட்டஸ்ட் ஆக இருக்கிறது. அமெரிக்காவுக்கு நான் வருகின் என்பதும், இங்குள்ள தமிழர்கள் அவர்கள் இருக்கும் பகுதிக்கு அழைத்தனர்.
அந்த போட்டியில் சிகாகோ வெற்றி அடைந்தது. இந்த சிகாகோ நகரில், மறைந்த தலைவர் கருணாநிதியும் வந்து இருக்கிறார். நான் அமெரிக்கா வரும்முன்பு, பயணம் உறுதியானதும் கருணாநிதியின் பயண விபரத்தை பார்த்தேன். 1970 ல் வாஷிங்க்டன் வந்தவர், பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளார்" என பேசினார்.
இதையும் படிங்க: ஒட்டுமொத்தமாக நோய்கிருமியை அழிக்க ஆல்கஹால் குளியல்.. 45 வயது பெண் பரிதாப பலி.!