ஓரினசேர்கைக்கு விரைவில் அனுமதி?.. ஆளுநர் அறிவிப்பால் கொண்டாட்டத்தில் ஓரினசேர்கையாளர்கள்.!
ஓரினசேர்கைக்கு விரைவில் அனுமதி?.. ஆளுநர் அறிவிப்பால் கொண்டாட்டத்தில் ஓரினசேர்கையாளர்கள்.!
தன்பாலினச்சேர்க்கை விசயத்திற்கு டோக்கியோ அங்கீகாரம் அளிக்கும். 2023 இல் இக்கொள்கையை அறிமுகப்படுத்த வாய்ப்புகள் உள்ளது என டோக்கியோ நகரின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் நாட்டில் உள்ள டோக்கியோ நகரில் ஓரினசேர்க்கை கூட்டாண்மையை அங்கீகரிக்க, கவர்னருக்கு தேசிய அளவில் ஓரினசேர்க்கை ஆர்வலர்கள் அழுத்தம் கொடுத்து வருவதால் அதனை அங்கீகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஓரினசேர்க்கையை அங்கீகரிக்காத நாடுகளில் ஜப்பானும் ஒன்றாக இருந்து வந்தது. இந்நாட்டின் அரசியல் அமைப்பு இருபாலின பரஸ்பர ஒப்புதலுடன் திருமணம் என்றே இன்று வரை உள்ளன.
கடந்த சில வருடமாக ஜப்பானில் ஓரினசேர்க்கை கூட்டாண்மையை அங்கீகரிக்க பல்வேறு போராட்டங்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. மேலும், ஓரினசேர்க்கை ஆர்வலர்கள் பல வழக்குகளையும் நீதிமன்றத்தில் தொடர்ந்து தாக்கல் செய்த வண்ணம் உள்ளனர்.
இதனால் வரும் நிதியாண்டில் ஒருபாலின சேர்க்கை கூட்டாண்மையை அங்கீகரிக்க தேவையான அடிப்படை கொள்கையை உருவாக்கவுள்ளதாக ஆளுநர் யூரிகோ கொய்கொ தெரிவித்துள்ளார். மேலும், மார்ச் 2023 ஆம் வருடத்திற்குள் இக்கொள்கையை டோக்கியோ நகரில் அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இது திருமணம் போன்ற சட்டரீதியான விளைவுகளை ஏற்படுத்தாது எனவும் கூறப்படும் நிலையில், ஓரினசேர்கைக்கு அனுமதி அளிக்கக்கூறி தொடர் குரல்கள் அங்கு உயர்த்தப்பட்டு வருவதன் எதிரொலியாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. கடந்த 2015 ஆம் வருடம் டோக்கியோவில் உள்ள ஷிபுயா மாவட்டத்தில், ஜப்பானிலேயே முதல் முறையாக ஓரினசேர்க்கை தம்பதிக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
கடந்த வருடத்தில் ஓரினசேர்கையாளர் திருமணத்தை அரசு அங்கீகரிக்க வேண்டும், எதனால் அங்கீகரிக்கவில்லை என்று ஜப்பானின் பல்வேறு நகர்களில் 10-ற்கும் மேற்பட்ட தம்பதிகள் நீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்துள்ளனர். இப்படியான ஒரு வழக்கில் அரசுக்கு நீதிமன்றம் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண உத்தரவிட்டது. இது முதற்கட்ட வெற்றியாக ஓரினசேர்கையாளர்களால் பாராட்டப்பட்டது.
அந்நாட்டில் ஆளும் கட்சியாக இருந்து வரும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி பழமைவாத கட்சியாக இருப்பதால், இதுதொடர்பான அரசியலமைப்பு கோப்புகள் விஷயத்தில் தயக்கம் காண்பிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த சமூகம் ஓர்பாலின திருமணத்தை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு இன்னும் வரவில்லை என்று பிரதமர் கூறியதாகவும் கூறப்படுகிறது.