கொத்துக்கொத்தாக பிணங்கள்... ஒருநாளில் தலைகீழாக புறண்டுபோன வாழ்க்கை.. 45,968 பேர் துருக்கி நிலநடுக்கத்தால் பலி.!
கொத்துக்கொத்தாக பிணங்கள்... ஒருநாளில் தலைகீழாக புறண்டுபோன வாழ்க்கை.. 45,968 பேர் துருக்கி நிலநடுக்கத்தால் பலி.!
உலகையே உலுக்கிய துருக்கி-சிரியா நிலநடுக்கத்தால் 45 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துவிட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கி, சிரியாவில் கடந்த பிப்ரவரி மாதம் 6ம் தேதி அதிகாலை ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கம் உலக நாடுகளையே அதிரவைத்தது. ரிக்டர் அளவுகோலில் 7 புள்ளிகளை தாண்டி பதிவான நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின.
இதனால் பெரிய அளவிலான உயிர்சேதம் ஏற்பாடு என அஞ்சப்பட்டு இருந்த வேலையில், துருக்கி மற்றும் சிரியாவுக்கு இந்தியா உட்பட பல உலக நாடுகள் உதவி செய்ய ஆதரவுக்கரம் நீட்டியது.
இந்தியா சார்பில் மருத்துவ பொருட்கள், மீட்பு படை குழுவினர் ஆகியோர் விரைந்து அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், அன்றைய ஒரேநாளில் அங்கு மொத்தமாக 3 மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டன.
இதனால் துருக்கி - சிரியா நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துகொண்டே சென்ற நிலையில், இன்றைய நாள் வரையில் மொத்தமாக 45,968 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.