அடக்கடவுளே.. நொறுங்கிய மருத்துவமனைக்குள் தொப்புள்கொடி கூட அறுக்கப்படாமல் தாயோடு இணைந்திருந்த குழந்தை உயிருடன் மீட்பு..!
அடக்கடவுளே.. நொறுங்கிய மருத்துவமனைக்குள் தொப்புள்கொடி கூட அறுக்கப்படாமல் தாயோடு இணைந்திருந்த குழந்தை உயிருடன் மீட்பு..!
துருக்கியில் ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கத்தின் காரணமாக தற்போது வரை 7900-க்கும் அதிகமான மக்கள் பரிதாபமாக பலியாகி உள்ளனர். அங்குள்ள பல்லாயிரக்கணக்கான அடுக்குமாடி குடியிருப்புகள் கீழே விழுந்து சிதலமடைந்துள்ளதால், அங்கு சிக்கியவர்களை மீட்கும் பணியானது முழு வீச்சுடன் நடைபெற்று வருகிறது.
இந்தியா, அமெரிக்கா உட்பட பல உலக நாடுகள் தனது நாட்டின் சார்பில் மீட்புபடை மற்றும் மருத்துவகுழுவை அங்கு அனுப்பி வைத்து, தேவையான உதவிகளை செய்ய ஏற்பாடுகள் செய்துள்ளன. இந்த நிலையில் சிரியாவில் உள்ள அப்ரின் நகரில் மருத்துவமனை கட்டிடம் நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்து நோயாளிகள் பலரும் அந்த இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.
அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வந்த நிலையில், பெண் ஒருவரின் சடலம் அங்கிருந்து மீட்கப்பட்டது. அவரை மெதுவாக வெளியே எடுத்த சமயத்தில் குழந்தை ஒன்று லேசான காயத்தோடு முணகிக்கொண்டிருந்துள்ளது.
அந்த குழந்தையின் தொப்புள் கொடி கூட அறுக்கப்படாமல் தாயோடு இணைந்து இருந்த நிலையில், மீட்பு குழுவினர் குழந்தையை பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்துள்ளனர்.