"பீர் முக்கியம் பாஸ்" விபத்தில் தப்பிய அடித்த நொடியே பாருக்குள் நுழைந்த நபர்.!
பீர் முக்கியம் பாஸ் விபத்தில் தப்பிய அடித்த நொடியே பாருக்குள் நுழைந்த நபர்.!
சாலைவழிப் பயணங்களில் இன்றளவில் விபத்துகள் என்பது மிகமிக சாதாரணமாகிவிட்டது. தனிநபரின் அலட்சியம், வாகனத்தின் திடீர் செயலிழப்பு உட்பட பல்வேறு காரணங்களால் விபத்துகள் நடக்கின்றன. இதில், அதிவேகம் என்பது அதிகம் கவனிக்கப்படுகிறது.
சாலைப் பயணங்களில் கவனம்
என்னதான் நாம் சாலைகளில் கவனமாக பயணம் செய்தால், விபத்துகள் என்பது எப்போதும் எங்கேயும் ஏற்படும் வாய்ப்புகளை கொண்டது என்பதால், நாம் கவனமுடன் செயல்படுவது அத்தியாவசியமாகிறது. ஒருசிலர் மட்டுமே விபத்துகளில் சிக்கினாலும் ஒரு சிறிய காயம் கூட இன்றி தப்பிப்பார்கள்.
இதையும் படிங்க: கால்களை உடைத்துக்கொண்ட பாகிஸ்தான் அதிபர்; என்ன நடந்தது? மருத்துவமனையில் அனுமதி.!
இந்நிலையில், சாலை ஒன்றில் ஏற்பட்ட விபத்தில், பேருந்து மோதி விபத்திற்குள்ளானவர், நொடியில் எழுந்து பீர் குடிக்க பப்புக்குள் சென்ற சம்பவம் நடந்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது.
6 ஆண்டுகளுக்கு முன் நடந்தது மீண்டும் வைரல்
கடந்த 2017ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி லண்டனில் இந்த நிகழ்வு நடைபெற்றது. சைமன் ஸ்மித் (வயது 53) என்பவர் சாலையோரம் வந்தபோது, பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்த மின்கம்பம், கடைகள் மீது மோதியபடி ஸ்மித்தின் மீதும் மோதியது.
நல்வாய்ப்பாக உயிர்தப்பிய ஸ்மித், விபத்தில் இருந்து தப்பியதும் நொடியில் எழுந்து பீர் குடிக்க பப்புக்குள் சென்றார். இந்த விஷயம் தொடர்பான காணொளி வைரலாகி வருகிறது. இதனை நெட்டிசன்கள் பலரும் பீர் தான் ரொம்ப முக்கியம் என வருணித்து கலாய்த்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அமீரக வரலாற்றில் முதல் முறை; துபாய் வளர்ச்சிக்காக 302 பில்லியன் திர்ஹம் நிதி ஒதுக்கீடு.!