குற்றவாளிகள் கையில் ஆயுதம்.. கற்பழிப்பு, கொள்ளை குற்றங்கள் உக்ரைனில் அதிகரிப்பு.! பகீர் வீடியோ.!!
குற்றவாளிகள் கையில் ஆயுதம்.. கற்பழிப்பு, கொள்ளை குற்றங்கள் உக்ரைனில் அதிகரிப்பு.! பகீர் வீடியோ.!!
உக்ரைன் நாட்டின் மீது போர்தொடுத்து சென்றுள்ள ரஷியா, 7 ஆவது நாளாக தனது தாக்குதலை தொடர்ந்து வருகிறது. உக்ரைன் நாட்டில் உள்ள பிரதான நகரங்கள், இராணுவ தளங்கள், முக்கிய விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் மீது தாக்குதல் நடக்கிறது. பல்வேறு இடங்களில் ஏவுகணை தாக்குதலும் நடைபெறுகிறது.
ரஷியவின் தலைநகர் கீவ் மற்றும் இரண்டாவது பெரிய நகரம் கார்கிவ்வில் கடுமையான தாக்குதல் நடத்தப்படுகிறது. உக்ரைன் இராணுவமும் பதில் தாக்குதலில் ஈடுபட்டுள்ள நிலையில், அந்நாட்டு மக்களுக்கு ஆயுதம் வழங்கப்பட்டுள்ளது. பிற நாட்டில் இருந்து தங்களின் நாட்டிற்காக போரில் ஈடுபட வருபவர்களுக்கு விசா கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டில் சிறையில் அடைக்கப்பட்ட குற்றவாளிகள் ரஷியாவுக்கு எதிராக போராட உதவி செய்தால் நிபந்தனையற்ற மன்னிப்பு வழங்கப்படும் என்று கூறி குற்றவாளிகள் கைகளிலும் ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் தெருவில் அப்பாவி கையிலும் ஆயுதம், குற்றவாளி கையிலும் ஆயுதம் இருக்கிறது.
சாலைமார்க்கமாக செல்லும் ரஷிய துருப்புகள் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் இல்லாமல் செல்கிறது. மக்கள் தங்களிடம் வார்த்தைகளால் சண்டையில் ஈடுபட்டாலும், அவர்களிடம் அமைதியான முறையில் பேசி அங்கிருந்து புறப்பட்டு செல்கின்றனர். இந்த நிலையில், சமூக வளைத்தளத்தில் உக்ரைனை சேர்ந்த ஒருவரின் வீடியோ வெளியாகியுள்ளது.
கடந்த பிப். 28 ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட வீடியோவில், "ரஷியாவுக்கு எதிராக போராட மக்களுக்கு ஆயுதம் வழங்குகிறோம் என அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார். இதனால் மக்கள் முதல் குற்றவாளிகள் வரை ஆயுதங்களை பெற்றுள்ளனர். இவர்கள் ஆயுதமேந்தி நாட்டினை காப்பாற்றாமல் கொள்ளை, கற்பழிப்பு போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ரஷிய வீரர்கள் 10 கி.மீ தொலைவில் இருக்கையில், துப்பாக்கி சூடு சம்பவம் ஊருக்குள் நடக்கிறது. ஊடகத்தில் ரஷியா தாக்குதல் நடத்துகிறது என கூறுகிறார்கள். ஆனால், சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தால் ஆயுதமேந்திய கும்பல் போர் சூழலில் தங்களின் முன்பகையை தீர்க்கிறது.
அரசின் முடிவு அராஜகத்தை செய்யும் குற்றவாளிகளுக்கு பேருதவி செய்துள்ளது. அவர்கள் தங்களின் வாழ்நாட்களில் தொட்டு பார்த்திடாத ஆயுதத்தை வைத்து மக்களை பலிகடா ஆக்க துடிக்கிறார்கள். ரஷியாவுக்கு எதிராக போராடுங்கள் என உள்நாட்டில் அதிபர் ஜெலன்ஸ்கி குழப்பத்தை ஏற்படுத்திவிட்டார். ஊடகம் ரஷியாவை குறைசொல்ல தயாராக உள்ளது. உள்நாட்டு பிரச்சனையை சொல்வது இல்லை" என்று தெரிவித்தார்.