#BigBreaking: 40 வீரர்கள், 10 அப்பாவி மக்கள் பலி.. உக்ரைன் அதிபர் போர் அறிவிப்பு.. மக்களுக்கு அழைப்பு.!
#BigBreaking: 40 வீரர்கள், 10 அப்பாவி மக்கள் பலி.. உக்ரைன் அதிபர் போர் அறிவிப்பு.. மக்களுக்கு அழைப்பு.!
சோவியத் யூனியனுடன் உக்ரைனை இணைக்க ரஷியா போர் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் இருந்து ரஷிய துருப்புகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உலகளவில் பெரும் பதற்றமான சூழல் உருவாகியுள்ள நிலையில், இதனால் 3 ஆம் உலக போர் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கை தெரிவித்துள்ள தகவலாவது, "உக்ரைன் அரசு ரஷியாவுடன் கொண்ட இராஜதந்திர உறவுகள் முழுவதும் முறித்துக்கொண்டது. நமது நாட்டின் நகரங்களை காப்பாற்ற முன்வரும் ஒவ்வொருவருக்கும் ஆயுதம் வழங்குவோம். உக்ரைனுக்கு ஆதரவாக செயல்பட தயாராகுங்கள். 40 உக்ரைன் வீரர்கள் மற்றும் 10 அப்பாவி மக்கள் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார். இதனால் போர் உச்சக்கட்டம் அடைந்துள்ளது.
அந்நாட்டின் இராணுவ வீரர்கள் முதல் மக்கள் வரை ஒவ்வொருவரும் போர்க்களத்தை சந்திக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. உக்ரைனின் மக்கள் மற்றும் படைபலத்தை வைத்து ரஷியாவை எதிர்கொள்வது அவர்களின் வீரமான முடிவை பறைசாற்றுகிறது என்றாலும், உலக நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவளிக்க வேண்டும் என தொடக்கத்தில் இருந்து அந்நாட்டின் அதிபர் கோரிக்கை வைத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.