உக்ரைன் அதிபர் நடித்த ஊழல் தொடரை களமிறக்கும் நெட்பிளிக்ஸ்..!!
உக்ரைன் அதிபர் நடித்த ஊழல் தொடரை களமிறக்கும் நெட்பிளிக்ஸ்..!!
உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் இரண்டு வாரங்களை கடந்து நடைபெற்று வருகிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உக்ரைனை தன்னிடம் சரண் அடைய சொல்லி படை எடுத்துச் சென்றுள்ளார். உக்ரைன் நாட்டின் அதிபர் நாங்கள் சரண் அடைய மாட்டோம் என்று பதில் தாக்குதல் நடத்தி வருகிறார்.
அவருக்கு ஆதரவாக மேற்கு ஏகாதிபத்திய நாடுகளான அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகியவை பொருளாதார மற்றும் ராணுவ தளவாட உதவிகளை செய்து வருகின்றன. இந்த நிலையில், 44 வயதாகும் உக்ரைன் அதிபர் வோளோடிமிர் ஜெலன்ஸ்கி கடந்த காலங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். அவர் நடித்த அரசியல் தொடரான Servent Of The People தற்போது அமெரிக்காவில் மீண்டும் ஒளிபரப்பு செய்யப்படுவதாக நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை நெட்பிளிக்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உதவி செய்துள்ளது. ஊழலுக்கு எதிராக ஒரு ஆசிரியர் எப்படி செயலாற்றுகிறார் என்பதை வைத்து அந்த தொடர் எடுக்கப்பட்டு இருந்த நிலையில், அதன் பின்னே அவர் அதிபர் தேர்தலிலும் வெற்றிபெற்று என்று அதிபராக போராடுகிறார்.
இவர் அதிபராக பொறுப்பேற்ற பின்னர் அந்த தொடர் ஒளிபரப்பு நிறுத்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அமெரிக்காவில் மீண்டும் அது ஒளிபரப்பு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.