ரஷிய அதிபரின் அதிரடி உத்தரவு - கொந்தளிக்கும் உலக நாடுகள்.. கடும் கண்டனம்.!
ரஷிய அதிபரின் அதிரடி உத்தரவு - கொந்தளிக்கும் உலக நாடுகள்.. கடும் கண்டனம்.!
உக்ரைன் நாட்டினை ஒட்டியுள்ள ரஷிய எல்லையில், ரஷியா 1.5 இலட்சம் படைவீரர்களை நிறுத்தியுள்ள நிலையில், கடந்த வாரம் முதலாகவே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. உக்ரைனின் கிழக்கு பகுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், லூகன்ஸ்க் மற்றும் ட்னஸ்டேக் ஆகிய 2 மாகாணங்கள் தனி நாடுகளாக அங்கீகரிக்கப்படுகிறது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்தார்.
மேலும், அங்கு ரஷிய படைகள் நுழைவதற்கும் உத்தரவிட்டதால், அங்கு போர்ப்பதற்றம் என்பது உச்சகட்டத்தினை எட்டியுள்ளது. இந்த நிலையில், உக்ரைனுக்குள் ரஷிய படைகள் நுழைய பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவுக்கு உலக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஜப்பான் நாட்டின் பிரதமர் புமியோ கிஷிடா, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், தென்கொரிய அதிபர் ஜெ இன், துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர், நியூசிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோரும் தங்களின் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.