எலுமிச்சை ஜூஸ் குடித்த 21 வயது இளம்பெண் மரணம்; அளவுக்கு அதிகமான டோஸால் நடந்த பயங்கரம்.!
எலுமிச்சை ஜூஸ் குடித்த 21 வயது இளம்பெண் மரணம்; அளவுக்கு அதிகமான டோஸால் நடந்த பயங்கரம்.!
அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா மாகாணத்தை சேர்ந்த கல்லூரி மாணவி சாரா கேட்ஸ் (வயது 21). இவர் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்.
சம்பவத்தன்று சாரா Panera Bread என்ற உணவகத்தில் சாப்பிட்ட நிலையில், அவர் மாரடைப்பு மற்றும் பிற உடல்நலக்கோளாறு ஏற்பட்டு அவதிப்பட்டுள்ளார்.
இறுதியில் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரின் உடலை உடற்கூறாய்வு செய்த பெற்றோர், மருத்துவ ரீதியான விபரங்களை பெற்று Red Bull உட்பட பிற எனர்ஜி குளிர்பானங்களை விட 3 மடங்கு அதிகளவு எலுமிச்சை பானத்திற்கான ரசாயனம் சேர்க்கப்பட்டது உறுதியானது.
சட்டவிரோதமாக அல்லது அளவுக்கு அதிகமாக சேர்க்கப்பட்ட எலுமிச்சை ரசாயனம் காரணமாக மரணம் ஏற்பட்டது உறுதியாகவே, மாணவியின் பெற்றோர் சட்டரீதியான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.