சீனாவில் கொரோனவை பரப்பியது அமெரிக்க ராணுவம்தான்..! சீனா அதிகாரி கூறியுள்ள பரபரப்பு தகவல்.!
US Army spread corono in to china chinese official says
சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவது பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. சீனாவின் ரகசிய பையோ ஆய்வு கூடத்தில் இருந்துதான் கொரோனா உற்பத்தி செய்யப்பட்டிருக்கும் என பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துவரும் நிலையில், அமெரிக்க ராணுவம்தான் சீனாவில் கொரோனா வைரஸை பரப்பியதாக அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் பகிரங்க குற்றசாட்டை முன்வைத்துள்ளார்.
சீனாவின் சமூக வலைதளஞலில் இதுபோன்ற கருத்துதுகள் அதிகம் பகிரப்பட்டுவரும் நிலையில், தற்போது மூத்த அரசு அதிகாரியே வெளிப்படையாக இப்படி கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள ஸோ லிஜியா, அமெரிக்காவில் எத்தனை பேருக்கு கொரோனா இருக்கிறது? அவர்கள் எந்தெந்த மருத்துவமணையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்? நீங்கள்தான் கொரோனா வைரஸை சீனாவிற்கு கொண்டுவந்திருக்கவேண்டும், வெளிப்படையாக இருங்கள், அமெரிக்கா இதுகுறித்து நிச்சயம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.