திடீர் தலைவலியால் 30 ஆண்டுகால நினைவை மறந்த 60 வயது மூதாட்டி; இப்படியும் ஒரு அறிய நிகழ்வு.!
திடீர் தலைவலியால் 30 ஆண்டுகால நினைவை மறந்த 60 வயது மூதாட்டி; இப்படியும் ஒரு அறிய நிகழ்வு.!
அமெரிக்காவில் உள்ள லூசியானா மாகாணத்தை சேர்ந்த பெண்மணி ஸ்கின் டெனிகோலா (வயது 60). இவருக்கு திருமணம் முடிந்து கணவர், குழந்தைகள், பேரக்குழந்தைகள் ஆகியோர் இருக்கின்றனர். கடந்த 2018-ம் ஆண்டு கடுமையான தலைவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி இரண்டு நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் சுயநினைவு இழந்துள்ளார்.
மருத்துவ சிகிச்சைக்கு பின் பெண்மணி விழித்துப் பார்த்த நிலையில், அவர் தனது 30 ஆண்டுகால நினைவை மறந்து இருக்கிறார். 2018-ல் இருந்து 30 ஆண்டுகள் பின்னோக்கி பயணித்து தனது வாழ்நாளில் இளம்பருவத்தை உணர்ந்த பெண்மணி தனக்கு திருமணம் நடந்தது, குழந்தைகள் பிறந்தது உட்பட பல விஷயங்களை மறந்துள்ளார்.
இதனால் மருத்துவர்கள் அதிர்ந்துபோன நிலையில், அவரது நினைவை மீட்க பல முயற்சிகள் மேற்கொண்டும் பலன் இல்லை. ஐந்து வருடமாக தற்போது வரை பெண்ணுக்கு பழைய நினைவுகள் திரும்பவில்லை. மருத்துவர்கள் மற்றும் குடும்பத்தினர் அவருக்கு நிலைமையை புரிய வைத்ததை தொடர்ந்து, தற்போது குடும்பத்துடன் அவர் வாழ முயற்சிக்கிறார்.
தனது நினைவு குறித்து பெண்மணி கூறுகையில், "தான் இறுதியாக கல்லூரியில் பயின்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு தயாரான போது எனக்கு மயக்கம் வந்தது. அதன் பின்னர் என்ன நடந்தது? என்று தெரியவில்லை என்று கூறி இருக்கிறார்.
கடுமையான தொடர் வேலை, அதிக மன அழுத்தம் அல்லது அது சார்ந்த நிகழ்வுகள், தாம்பத்தியத்தின் போது அதிக பயத்திற்குள்ளாகி ஹார்மோன் பிரச்சனையை எதிர்கொள்ளுதல் போன்றவை இந்த தலைவலி மற்றும் அது சார்ந்த நினைவு இழப்புக்கு வழிவகை செய்வதாக அமெரிக்க தேசிய மருத்துவ ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.