நொடியில் உடைந்து விழுந்த ஆற்றுப்பாலம்; 11 பேர் நிலை என்ன?.. நூலிழையில் உயிர்தப்பிய இருவர்.! பகீர் காட்சிகள்.!
நொடியில் உடைந்து விழுந்த ஆற்றுப்பாலம்; 11 பேர் நிலை என்ன?.. நூலிழையில் உயிர்தப்பிய இருவர்.! பகீர் காட்சிகள்.!
வியட்னாம் நாட்டில் உள்ள வடக்கு பகுதிகளை, சமீபத்தில் யாகி என்ற பயங்கர புயல் தாக்கியது. இந்த புயல் கரையை கடக்கும்போது, 100 கி.மீ வேகத்தில் அசுரத்தனமாக கடந்தால், பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும், அடுக்குமாடி குடியிருப்புகளின் கண்ணாடிகள் உடைத்து எறியப்பட்டன.
இதனிடையே, அங்குள்ள பு தொ (Phu Tho) மாகாணத்தில் இருந்த இரும்பு பாலம், தனது ஸ்திரத்தன்மை இழந்து காணப்பட்டுள்ளது. இது தெரியாமல் அதில் வாகனங்கள் தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று பாலம் திடீரென இடிந்து விழுந்தது.
பாலம் இடிந்து விழுந்து விபத்து
இதனால் பாலத்தின் மீது சென்ற லாரி, கார்கள் உட்பட பல வாகனங்கள் ஆற்றில் விழுந்தன. 3 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 11 பேரின் நிலை தெரியவில்லை. அவர்களை மீட்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இருசக்கர வாகன ஓட்டி, கார் என இரண்டு வாகனங்களை சேர்ந்தவர்கள் ஒருசில அடி இடைவெளியில் அதிஷ்டவசமாக உயிர்தப்பி இருந்தனர். இந்த விஷயம் குறித்த பதைபதைப்பு காணொளி வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: 104 கிமீ வேகத்தில் அசுரத்தனமான காற்று; வியட்நாமை புரட்டியெடுத்த யாகி புயல்..!
யாகி புயல் காரணமாக 15 க்கும் மேற்பட்டோர் அங்கு உயிரிழந்துள்ள நிலையில், 150 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: 24/7 சிசிடிவியை தலையில் சுமக்கும் பெண்.! அதிர்ச்சி விளக்கம் கொடுத்த தந்தை.!