நீண்ட நேரமாக குரைத்துகொண்டிருந்த நாய்.! சந்தேகத்தில் தோண்டி பார்த்தவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
Villagers digup tha abondoned newborn baby
சீனாவை சேர்ந்தவர்கள் ஜியாவோ சிங்லு மற்றும் ஜாவ் ஷாங்க்டாங். இவர்கள் லாலுவுக்கு அருகில் உள்ள மலைப்பகுதிகளில் காலநிலை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். அப்போது அப்பகுதியில் நாயொன்று நீண்ட நேரமாக தனது காலால் குழிபதித்தவாறு குறைத்துக்கொண்டே இருந்துள்ளது.
இதனால் சந்தேகமடைந்த அவர்கள் அப்பகுதியில் குழி தோண்டியுள்ளனர். அங்கு அட்டைபெட்டி ஒன்று மூடிய நிலையில் இருந்துள்ளது. அதனை எடுத்து அவர்கள் திறந்து பார்த்தபோது அதற்குள் மெத்தையில் மூடிய நிலையில் ஆண் குழந்தை ஒன்று உயிருடன் இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனே குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ரத்தசோகை மற்றும் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.அதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில் குழந்தை பிறந்த மறுநாளே நுரையீரல் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டதாக கருதி பெற்றோர்கள் புதைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது ஏற்படுத்தியுள்ளது