திரும்ப வந்துட்டேனு சொல்லு.. கொரியா எல்லையில் குண்டு மழை.. வேலையை காட்ட துவங்கிய கிம்!
war situation at korea border gunshots
20 நாட்களுக்கு பிறகு வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் மீண்டும் வெளியில் வந்தவுடன் இன்று கொரியா எல்லையில் குண்டு மழை பொழிந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீண்ட நாட்களாகவே உலக அரசியலில் மிகப்பெரும் சர்ச்சைகளை அடிக்கடி ஏற்படுத்தி வருபவர் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன். இவர் 20 நாட்களாக வெளியில் வராமல் இருந்ததால் உலகின் முன்ணனி நாடுகள் அனைத்தும் இவரை பற்றிய தகவலை தேடி அலைந்தன.
இந்நிலையில் அணைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கிம் ஜாங் உன் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று நேற்று வெளியானது. இத்தனை தொடர்ந்து இன்று கொரியா எல்லையில் குண்டு மழை பொழிந்துள்ளது.
நீண்ட நாட்களாகவே வட கொரியா மற்றும் தென் கொரியா நாடுகளுக்கு இடையே பதட்டம் நிலவுவது வழக்கமாகி உள்ளது. தென் கொரியா அமெரிக்காவுடன் இணைந்து கொண்டு வட கொரியாவை மிரட்டுவதும், பதிலுக்கு வட கொரியா ஏவுகணை சோதனைகள் மூலம் பயமுறுத்துவதும் அடிக்கடி அரங்கேறிவருகிறது.
இந்த சூழலில் இன்று கொரியா எல்லையில் வட கொரியா ராணுவ வீரர்கள் துப்பாக்கியாலும், சிறிய வகை பீரங்கியாலும் குண்டு மழை பொழிந்துள்ளனர். இதை குறித்து எதுவும் எதிர்பார்க்காத தென் கொரியா வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் கொரியா எல்லையில் பதட்டம் நீடித்து வருகிறது.