ஆசனவாயில் சிக்கிய வாட்டர் பாட்டில்..மலம் கழிக்க முடியாமல் அவதி... மாட்டிக்கொண்டு தவித்த முதியவர் ...
ஆசனவாயில் சிக்கிய வாட்டர் பாட்டில்..மலம் கழிக்க முடியாமல் அவதி... மாட்டிக்கொண்டு தவித்த முதியவர் ...
தெஹ்ரானில், 50 வயதுடைய ஒருவர் ஆசனவாயில் வாட்டர்பாட்டில் மாட்டிக் கொண்டதை வெளியில் மறைத்த சம்பவம் ஈரானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது கணவர் இரண்டு மூன்று நாட்களாகத் சரியாகச் சாப்பிடாமல் மலம் கழிக்க முடியாமல் அவதிப்படுவதைப் பார்த்து, அவரை டாக்டரிடம் அழைத்துச் சென்றுள்ளார் அவருடைய மனைவி. அப்போதும் என்ன நடந்தது என்பதை டாக்டரிடம் கூட அவர் கூறவில்லை. டாக்டரிடம் மலம் கழிக்க முடியவில்லை, பசிக்கவில்லை என்று மட்டும் கூறியிருக்கிறார். எனவே, அந்தக் கணவரின் உடலில் என்ன பிரச்சினை எனத் தெரிந்து கொள்வதாக, டாக்டர் அவரது வயிற்றுப்பகுதியை ஸ்கேன் செய்து பார்த்துள்ளார் .
அப்போது அவரது ஆசனவாயில் வாட்டர்பாட்டில் ஒன்று சிக்கியிருப்பதைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 250 மிலி நீரை நிரப்பும் 19 செமீ நீளம் இருந்த அந்த பாட்டில் எப்படி ஆசனவாயில் சிக்கியது என்பதை கூற அவர் மறுத்துள்ளார். அவருக்கு தன் ஆசனவாயில் வாட்டர்பாட்டில் இருப்பது தெரிந்தும், அதைத் தன் மனைவியிடம் கூறினால் அவர் நிச்சயம் திட்டுவார் என அவரிடம் மறைத்துள்ளார்.
அதன் பிறகு ஒருவழியாக அறுவைச் சிகிச்சை செய்யாமலேயே, ஆசனவாய் வழியாகவே டாக்டர்கள் அந்த வாட்டர்பாட்டிலை வெளியில் எடுத்துள்ளனர். ஆசனவாய் வழியாக குடலில் சிக்கியிருந்த அந்த வாட்டர்பாட்டிலால் அவரது உடலுக்கு வேறு எந்தவித ஆபத்தான பிரச்சினையும் ஏற்படவில்லை. மூன்று நாட்கள் மருத்துவக் கண்காணிப்பில் வைத்து விட்டு அவரை வீட்டிற்கு அனுப்பியுள்ளனர்.
அந்த வாட்டர்பாட்டிலை சம்பந்தப்பட்ட நபரே உள்ளே செலுத்தியிருக்க வேண்டும் என்பது டாக்டர்கள் கணிப்பு. சிலர் பாலியல் திருப்திக்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவார்கள் என டாக்டர்கள் கூறியுள்ளனர். ஆனால் இவர் அதுபோன்ற காரணங்களுக்காக அப்படிச் செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் மனநலப் பிரச்சினையா? என்பது தெரியவில்லை. எனினும் அவருக்கு மனநல சிகிச்சை எடுத்துக் கொள்ளவும் டாக்டர்கள் பரிந்துரைத்துள்ளனர்.