×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடியாத்தி என்ன குளிரு... செக் குடியரசில் பாக்ஸிங் தினம்... 5 டிகிரி செல்சியஸ் குளிர்... நீச்சல் அடித்து மகிழ்ந்த மக்கள்..!

அடியாத்தி என்ன குளிரு... செக் குடியரசில் பாக்ஸிங் தினம்... 5 டிகிரி செல்சியஸ் குளிர்... நீச்சல் அடித்து மகிழ்ந்த மக்கள்..!

Advertisement

செக் குடியரசின் பிரேக் நகரில் ஆண்டுதோறும் பாக்ஸிங் தினத்தை முன்னிட்டு உறைபனி ஆற்றில் ஆண்களும், பெண்களும் ஆர்வத்துடன் நீச்சல் அடித்து மகிழ்ந்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

செக்கோஸ்லோவைக்கியாவில் குளிர்கால நீச்சலை மிகவும் பிரபலப்படுத்திய நபரான ஆல்பர்ட் நிக்கோடெமின் நினைவாக ஆண்டுதோறும் பாக்ஸிங் தின குளிர்கால நீச்சல் போட்டி வெகு விமர்சையாக நடைபெற்று வருகின்றது.

அந்த வகையில் 5 டிகிரி செல்சியஸ்  குளிரில் வல்டவா ஆற்றில் செக் குடியரசு, ஜெர்மனி, போலந்து, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 350 நீச்சல் வீரர்கள் 100, 300 மற்றும் 750 மீட்டர் என மூன்று பிரிவுகளில் நடக்கும் நீச்சல் போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது இலக்குகளை நோக்கி சீறிப்பாய்ந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Boxing day #Cold #Swimming
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story