×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வாட்ஸப்பில் பாரின் நம்பர் Unknown கால் வருகிறதா?.. மக்களே உஷாராக இருங்கள்.. மோசடியில் புது ரூட்டு போட்டு கைவரிசை.!

வாட்ஸப்பில் பாரின் நம்பர் Unknown கால் வருகிறதா?.. மக்களே உஷாராக இருங்கள்.. மோசடியில் புது ரூட்டு போட்டு கைவரிசை.!

Advertisement

இன்றளவில் தொழில்நுட்பங்கள் இன்றி நாம் இல்லை என்ற அளவில் நமது வளர்ச்சி அபரீதமாக அதிகரித்துள்ளது. நமது ஸ்மார்ட்போன்கள் நமக்கு தேவையான பல உதவிகளை செய்கிறது. அதில் இருக்கும் ஒவ்வொரு செயலியும் ஒவ்வொரு விஷயங்களை நமக்கு கற்றுக்கொடுக்கிறது. 

வாட்சப் உலகளவில் அறிமுகம் செய்யப்பட்ட நாட்களில் இருந்து பல உதவிகளை பயனர்களுக்கு செய்துள்ளது. எளிதில் ஒருவரிடம் பேசவும், வீடியோ காலில் கண்டு ரசிக்கவும் என இருந்து வந்த வாட்சப் மேலும் தன்னை புதுப்பித்து வருகிறது. ஸ்மார்ட் உலகத்தில் டெக்னாலஜியால் எவ்வுளவு பயனோ, அதே அளவுக்கு ஆபத்தும் நிறைந்துள்ளது. 

இந்த நிலையில், வாட்ஸப்பில் தொடர்பு கொள்ளும் மர்ம நபர்கள் மோசடி செயலை அரங்கேற்றும் நிகழ்வு அம்பலமாகியுள்ளது. அதாவது, வெளிநாடுகளில் வேலை பார்த்துவரும் நபர்களின் விபரங்களை சேகரிக்கும் ஹேக்கர் குழு, இந்தியாவில் உள்ள அவர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு வாட்சப் ஆடியோ காலில் தொடர்பு கொண்டு பேசுகின்றனர். 

இவர்கள் வெளிநாடுகளில் உள்ள பயனர்களின் விபரத்தை தெரிந்துகொண்டு, அவருக்கு அவசர தேவை  மருத்துவ சிகிச்சை என கூறி மோசடி செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய வெளிநாட்டு எண்ணில் இருந்து தொடர்பு கொள்வதால் உண்மையில் நமது உறவினருக்கு ஆபத்தோ? என அஞ்சி சிலர் பணம் அனுப்பி சம்பந்தப்பட்டவருக்கு தொடர்பு கொள்ளும்போது மோசடி உறுதியாகியுள்ளது. 

இதனால் மக்கள் சுதாரிப்புடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. உங்களின் உறவினர் அல்லது நண்பர் வெளிநாட்டில் பணியாற்றி வந்தால், அவரது பெயரை கூறி அவசரம் என பணம் கேட்டால் உறுதி செய்யாமல் பணம் அனுப்ப வேண்டாம். மோசடியில் இருந்து தப்பிக்க சுதாரிப்போடு இருங்கள்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#World news #Whatsapp #unknown number #Technology #relative call #வாட்சப் #உலகம் #டெக்னாலஜி
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story