உலகளவில் எந்த நாட்டு பெண்கள் அதிகம் மது குடிக்கிறார்கள் தெரியுமா? இந்திய பெண்கள் எத்தனாவது இடம் தெரியுமா?
Which country girl drinking more alcohol report says
நாகரிக வளர்ச்சிக்கேற்ப மனிதர்களின் அன்றாட பழக்கவழக்கங்களும் மாறிக்கொண்டே வருகிறது. அதில் ஒன்றுதான் உடம்பிற்கு தீங்கு தரும் மது பழக்கம். இன்று பள்ளி செல்லும் சிறுவர்கள் கூட மதுவுக்கு அடிமையாகி மது அருந்துவதை நம்மால் பார்க்க முடிகிறது.
பெரும்பாலான ஆண்கள் மதுவுக்கு முற்றிலும் அடிமையாகி அதனால் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். பெண்கள் நாங்கள் மட்டும் என்ன சும்மாவா என்பது போல தற்போது பெண்களும் மது அருந்த தொடங்கிவிட்டனர்.
அந்தவகையில், உலகளவில் தினமும், எந்த நாட்டை சேர்ந்த ஆண்களும், பெண்களும் அதிகளவு மது குடிக்கிறார்கள் என்பது குறித்த ஒரு ஆய்வு ஓன்று அதன் விவரத்தை வெளியிட்டுள்ளது.
அதன்படி உக்ரைன் பெண்கள் நாள் ஒன்றிற்கு 4.2 அவுன்ஸ் மதுவும், ஆண்கள் 7 அவுன்ஸ் மதுவும் குடிப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கின்றது.
அதேபோல அண்டோரா நாட்டை சேர்ந்த பெண்கள் நாள் ஒன்றிற்கு 3.4 அவுன்ஸ் மது குறிப்பதாகவும் , ஆண்கள் 4.3 அவுன்ஸ் மது குறிப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
பிரித்தானிய நாட்டில் பெண்கள் ஆண்களுக்கு நிகராக மது அருந்துவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவருமே நாள் ஒன்றிற்கு 3.0 அவுன்ஸ் மது அருட்சஙகுகிறார்களாம்.
ஜேர்மனியின் பெண்கள் நாள் ஒன்றிற்கு 2.9 அவுன்ஸ் மதுவும், ஆண்கள் 4 அவுன்ஸ் மதுவும், சுவிட்சர்லாந்து பெண்கள் நாள் ஒன்றிற்கு 2.8 அவுன்ஸ் மதுவும், ஆண்கள் 2.9 அவுன்ஸ் மதுவும் குடிப்பது தெரியவந்துள்ளது.
இன்று வரை இந்திய நாட்டை சேர்ந்த பெண்கள் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை. போற போக்கில் விரைவில் நம் நாடு பெண்களும் இந்த பட்டியலில் வந்துவிடுவார்கள் போல தெரிகிறது.