WHO புகார்...இறப்பு எண்ணிக்கை குறைத்துக் காட்டுகிறதா சீனா...?
WHO புகார்...இறப்பு எண்ணிக்கை குறைத்துக் காட்டுகிறதா சீனா...?
உலக நாடுகளையே கதி கலங்க வைத்த கொரோனா வைரஸானது முதன் முதலில் சீனாவில் உள்ள ஊஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்டது. மேலும் படிப்படியாக இதன் தாக்கம் அதிகரித்து உலக நாடுகள் அனைத்திலும் பரவியது.
இதனையடுத்து இந்தப் பெரும் தொற்றின் தாக்கம் படிப்படியாக குறையத் தொடங்கிய நிலையில் தற்போது மீண்டும் வீரியம் எடுத்திருப்பது உலக நாடுகளிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் கொரோனாவின் தாயகமான சீனாவில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருவதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் கொரோனா தாக்கத்தால் ஏற்படும் இறப்புகளை சீனா மிகவும் குறைத்து காண்பிப்பதாக உலக சுகாதார அமைப்பு குற்றம் சாட்டி உள்ளது. மேலும் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் இறந்து வரும் நிலையில் சீனா இறப்பு விகிதத்தினை குறைத்துக் காட்டி வருவதாக கூறுகிறது. இந்நிலையில் சீனாவில் கொரோனா தாக்கத்தினால் குறைந்தது ஒரு மில்லியன் இறப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என வல்லுநர்கள் கணித்துள்ளனர்.