கொரோனாவில் இருந்து தப்பிக்க, பெண்களின் உள்ளாடையை மாஸ்க்காக பயன்படுத்தலாம்.! வைரல் பதிவு.!
Woman Uses A Bra To Make A Face Mask Because Of Corono
சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகளவில் பெரும் தொற்றுநோயாக மாறி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க, அணைத்து நாடுகளின் அரசாங்கமும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. இந்நிலையில், கொரோனாவில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள பயன்படும் முக கவசம் கிடைப்பதில் தற்போது பெரும் சிக்கல் எழுந்துள்ளது.
இந்நிலையில், ஜப்பானை சேர்ந்த இளம் மாடல் ஒருவர், பெண்களின் உள்ளாடையை முக கவசமாக மாற்றி அதை அனைவரும் பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளதோடு, அதுபோன்ற முக கவசம் ஒன்றை தயார் செய்து அதனை அணிந்தபடி புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்த பெண் கூறியுள்ள யோசனை சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. சிலர், இந்த யோசனையை ஏற்றுக்கொண்டாலும், சிலர் இதனை அருமையான நகைச்சுவை என கிண்டலும் செய்துவருகின்றனர்.