புற்றுநோயால் மூக்கை இழந்த பெண்மணி: அலட்சியத்தால் விளைந்த சோகம்.!
புற்றுநோயால் மூக்கை இழந்த பெண்மணி: அலட்சியத்தால் விளைந்த சோகம்.!
இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த பெண்மணி லிசா மெர்சர் (வயது 44). இவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்து வந்த நிலையில், திடீரென தனது மூக்கின் சுவாசத்தை இழந்துள்ளார். மேலும் அழுகிய நிலையிலான துர்நாற்றம் வீசுவது போல உணர்ந்துள்ளார்.
உடல்நிலை சரியில்லாமல் இவ்வாறு நடக்கலாம் என முதலில் பெண்மணி அலட்சியமாக இருந்ததாக கூறப்படுகிறது. நாளடைவில் மூக்கிலிருந்து ரத்தம் வடிதல் உட்பட பல பிரச்சினைகளை சந்தித்ததும், உடனடியாக மருத்துவமனைக்கு சென்று அனுமதியாகியுள்ளார்.
அப்போது அவருக்கு புற்றுநோய் இருந்தது தெரியவந்ததால், அவரது மூக்கில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டு மூக்கை அகற்றி இருக்கின்றனர். இதனால் பெண்மணி மூக்கு இல்லாமல் தோற்றமளிக்கும் சோகம் நடந்துள்ளது.
மேலும் மூக்கு பகுதியில் ஏற்படும் புற்றுநோய் என்பது மிகவும் அரிதானது என்று கூறும் மருத்துவர்கள், முதலிலேயே இதனை கண்டறிந்திருந்தால் அப்போதே சரிசெய்ய வாய்ப்பு இருந்திருக்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.