கொரோனா வைரஸ் பணத்தால்தான் பரவுகிறது என அஞ்சி பெண் செய்த காரியம்.! வைரலாகும் அதிர்ச்சி புகைப்படம்.!
Women burn money for fear of coronovirus
சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகில் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை 3000க்கும் அதிகமான பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 80000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் உலக நாடுகளே பெரும் அச்சுறுத்தலில் உள்ளது.
இதனால் பல நாடுகளில் மக்கள் அனைவரும் எப்பொழுதும் முகத்தில் மாஸ்க் அணிந்தவாறே, வைரஸ் தாக்குதலில் இருந்து தங்களை பாதுகாத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி சில நாடுகளில் கைகுலுக்குதல், முத்தமிடுதல் போன்றவையும் தடைசெய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சீனாவில் யுவான் நோட்டுகள் மூலம் வைரஸ் பரவலாம் என எண்ணிய பெண்ணொருவர் பீதியில் 3000 யுவான் நோட்டுகளை வீட்டில் உள்ள மைக்ரோ ஓவன் உள்ளே வைத்துள்ளார். இதில் தீயின் சூட்டில் பணம் முழுவதும் கருகிப் போயுள்ளது.
இதனைத் தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த CITIC என்ற வங்கியின் உள்ளூர் கிளை, கருகிய நோட்டுகளை வாங்கிக்கொண்டு புதிய நோட்டுகளை கொடுத்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.