துருக்கி நிலநடுக்கத்தால் தரைமட்டமான கட்டிடங்கள்.! இடிபாடுகளுக்கு நடுவே பிறந்த அதிசய குழந்தை!!
துருக்கி நிலநடுக்கத்தால் தரைமட்டமான கட்டிடங்கள்.! இடிபாடுகளுக்கு நடுவே பிறந்த அதிசய குழந்தை!!
துருக்கியில் நிலநடுக்கத்தால் தரைமட்டமான கட்டிடங்களின் இடிபாடுகளுக்கு மத்தியில் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
துருக்கியில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை 7.8 ரிக்டர் அளவில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து சில மணி நேரத்திலேயே 7.5 என்ற ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து பலமுறை நிலநடுக்கங்கள் ஏற்பட்ட நிலையில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. இந்த இடிபாடுகளில் சிக்கி சுமார் 7ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் பல்வேறு நாட்டினரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். இதற்கிடையில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி பெண் ஒருவர் ஆண்குழந்தை பெற்றெடுத்த சம்பவம் அனுதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது துருக்கியில் நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்பொழுது நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளது. அதில் சிக்கிக்கொண்ட அந்தப் பெண் ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். மேலும் அவர் உயிரிழந்ததாகவும், குழந்தை தற்போது நலமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.