சூட்கேஸ் வர்றது போல் வருது.. பிரேத பரிசோதனை செய்யும் மருத்துவ பெண் உண்மையை கூறி கதறி அழும் வீடியோ காட்சி..
லண்டனில் பிரேத பரிசோதனை செய்யும் பெண் மருத்துவர் ஒருவர் கதறி அழும் வீடியோ காட்சி தற்போது வெளியாகி வைரலாகிவருகிறது.
லண்டனில் பிரேத பரிசோதனை செய்யும் பெண் மருத்துவர் ஒருவர் கதறி அழும் வீடியோ காட்சி தற்போது வெளியாகி வைரலாகிவருகிறது.
உலகம் முழுவதும் கொரோனா என்ற கொடிய வைரஸினால் பலர் பாதிக்கப்பட்டதோடு, பலர் உயிரிழந்துள்ளனர். இந்த கொடிய வைரஸினால் இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற பெரிய நாடுகள் பெரிய பாதிப்புகளை சந்தித்துவருகிறது. இந்நிலையில் இங்கிலாந்து நாட்டில் தற்போது உருமாறிய கொரோனா வைரஸினால் மேலும் பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கொரோனாவால் இறந்தர்வர்களின் பிரேதங்களை பரிசோதனை செய்தல் மற்றும் அவற்றை கையாளுதல் குறித்து லண்டனில் உள்ள ராயல் லண்டன் மருத்துவமனையில் anatomical pathology என்னும் துறையில் வேலை பார்த்துவரும் Hannah Leahy எனும் பெண் பேசும்போது, தான் பிரேத பரிசோதனை செய்யும் இடத்தில், கண்வெயர் பெல்ட்டில் சூட்கேஸ்கள் வருவதுபோல் அடுத்தடுத்து கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்கள் வருவதாகவும், அவற்றை பார்க்கும்போது தனது மனதிற்கு மிகவும் வேதனையாக இருப்பதாகவும் கூறி உணர்வுபூர்வமாக அழுது கலங்கியுள்ளார் அந்த பெண்.
மேலும், இறந்தவர்களின் சடலங்களை சூட்கேசுடன் ஒப்பிட நான் விரும்பவில்லை எனவும், ஆனால் அப்படித்தான் இறந்தவர்களின் சடலங்கள் அடுத்தடுத்து வருவதாகவும் கூறி அந்த பெண் கண்ணீர் சிந்தி அழுகிறார். இதனை பார்த்த அவருடன் பணிபுரியும் சக பெண் ஒருவரும் அழுகிறார். இதுகுறித்த வீடியோ ஒன்று டெய்லி மெயிலில் வெளியாகியுள்ளது.
Credits: https://www.dailymail.co.uk/
Video Link: https://www.dailymail.co.uk/femail/article-9167385/Senior-mortician-Royal-London-Hospital-breaks-admits-feels-like-conveyor-belt.html#v-4876757205506409199