மகளிர் தினத்தில் சாதித்துக் காட்டிய தமிழக மங்கை; குவியும் பாராட்டு.!
world health organisation - ms swaminathan
இந்தியாவின் பசுமை புரட்சியின் தந்தையும் முதுபெரும் வேளாண் விஞ்ஞானியுமான எம்.எஸ். சுவாமிநாதன் மகள் சவுமியா சுவாமிநாதன் உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
1960 களில் இந்தியாவில் உணவு பஞ்சம் ஏற்பட்டபோது கோதுமை உற்பத்தி மற்றும் நெல் உற்பத்தியில் தன்னிறைவு அடையச் செய்த நாடாக விளங்கச் செய்தவர் தமிழகத்தைச் சேர்ந்த முதுபெரும் வேளாண் விஞ்ஞானியான எம் எஸ் சாமிநாதன். அதனால் இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
நாடு முழுவதும் இன்று உலக மகளிர் தினம் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இவ்வேளையில் தமிழகத்தைச் சேர்ந்த மகளிர் ஒருவர் உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது தமிழர்கள் நம் ஒவ்வொருவருக்கும் பெருமை அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.
காசநோய் ஆராய்ச்சியாளரான சவுமியா சுவாமிநாதன் இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக பணியாற்றினார். தொடர்ந்து உலக சுகாதார அமைப்பின் திட்டங்களுக்கான துணை இயக்குநராக கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். தற்போது பதவி உயர்வு அளிக்கப்பட்டு அந்த அமைப்பின் தலைமை விஞ்ஞானியாக பொறுப்பேற்க உள்ளார். இதையடுத்து சவுமியாவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.