அடுத்த 10 ஆண்டுகளில் 15 கோடி மக்களின் உயிருக்கு ஆபத்து..! காத்திருக்கும் மிகப்பெரிய ஆபத்து.! பாதிப்பு எந்தெந்த நாட்டிற்கு?
World research institute warning after 10 years
தற்போது உலகமே கொரோனா வைரஸ் தாக்கத்தில் சிக்கி தவித்துவரும் நிலையில் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் வெள்ளத்தால் உலகளவில் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படும் என புதிய ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
தி வேர்ல்டு ரிசோர்ஸ் இன்ஸ்டியூட் என்ற சர்வதேச ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில், 2030ம் ஆண்டின் முடிவில் சுமார் 14.7 கோடி பேர் ஆறுகள் மற்றும் கடலோர வெள்ளத்தால் பாதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2050ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை மிகப்பெரிய பேரழிவாக இருக்கும் என்றும், மொத்தம் 221 மில்லியன் மக்கள் ஆபத்தில் இருப்பதாகவும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
வங்கதேசம், வியட்நாம், இந்தியா, இந்தோனேஷியா மற்றும் சீனா போன்ற தெற்கு, தென்கிழக்கு ஆசியாவில் பாதிப்புகள் மோசமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்காவில் கடலோர வெள்ள பாதிப்புகள் அதிகமாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளது.
குறிப்பாக நகர்ப்புற கடலோர பகுதிகள் வெள்ளத்தால் இழக்க நேரிடும் நாடுகளின் பட்டியலில் சீனா, இந்தோனேஷியா வரிசையில் அமெரிக்கா 3வது இடத்தில் உள்ளது என்றும், லூசியானா, மாசசூசெட்ஸ் மற்றும் புளோரிடா போன்ற மாகாணங்களில் நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் அடுத்த 10 ஆண்டுகளில் பாதிக்கப்படுவர் என்றும் குறிப்பிட்டுள்ளது.