அதிக இறப்பை ஏற்படுத்தும் Neo Cov என்ற புதிய வைரஸ் - சீனாவின் யூகான் ஆய்வாளர்கள் எச்சரிக்கை.!
அதிக இறப்பை ஏற்படுத்தும் Neo Cov என்ற புதிய வைரஸ் - சீனாவின் யூகான் ஆய்வாளர்கள் எச்சரிக்கை.!
சீனாவின் யூகான் ஆய்வாளர்கள் தென்னாப்பிரிக்காவில் இருந்து Neo Cov என்ற வைரஸ் பரவி வருவதாக எச்சரித்து இருக்கின்றனர். கொரோனாவின் உருமாறிய வகையான Neo Cov வைரஸ் அதிவேகமாக பரவும், அது அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் என்றும் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஏற்கனவே கொரோனா, டெல்டா, ஒமிக்ரான் என உலக நாடுகள் பெரும் போராட்டத்தில் தத்தளித்து பொருளாதார ரீதியாகவும், பிற ரீதியாகவும் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. இந்த சூழலில், கொரோனாவின் பிறப்பிடமாக இன்று வரை கருதப்படும் யூகான் நகரின் ஆய்வாளர்கள், Neo Cov என்ற வைரஸ் குறித்து எச்சரித்து இருக்கின்றனர்.
மேலும், இந்த வைரஸால் 3 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் உலக நாடுகள் மற்றும் மக்கள் மீண்டும் கலக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர்.