#Breaking: WWE Royal Rumble பிரிவில் கோடி ரூத்ஸ், ரெஹா ரெஃப்ளெ வெற்றி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
#Breaking: WWE Royal Rumble பிரிவில் கோடி ரூத்ஸ், ரெஹா ரெஃப்ளெ வெற்றி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
2023 ராயல் ரம்பில் விளையாட்டில் அமெரிக்க, ஆஸ்திரேலிய போட்டியாளர்கள் வெற்றி அடைந்துள்ளனர்.
WWE மல்யுத்த போட்டியானது உலகளவில் வரவேற்பை பெற்றது ஆகும். இது தொழில்முறை மல்யுத்தம் என்பதால் அவர்களுக்குள் விதிமுறைகளை வகுத்துக்கொண்டு பகுதியளவு நடிப்பு, யுத்தம் என தங்களுக்குள் விதிமுறைப்படி சண்டையிடுவார்கள். கடந்த காலங்களில் இவை உண்மையான சண்டை என நம்பப்பட்டது. ஆனால், பின்னாளில் அவை மீதான பார்வை மாறியது.
விதிமுறையை மீறும் போட்டியாளர்கள் உடனடியாக காவலர்கள் உதவியுடன் அங்கிருந்து வெளியேற்றப்படுவார்கள். நியூயார்க் நகரில் உள்ள மைதானத்தில் நடைபெறும் WWE போட்டிக்கு, உலகளவில் ரசிகர்கள் இருக்கின்றனர். WWEல் ரா, ஸ்மாக்டவுன், மணி பேங்க், சாம்பியன்ஷிப், உலக ஹெவிவெய்ட் & ECW சாம்பியன்ஷிப் போன்று பல பிரிவு போட்டிகள் நடைபெறும்.
சமீபத்தில் டெக்சாஸில் உள்ள சான் அன்டோனியோவில் ராயல் ரம்புல் பிரிவில் போட்டிகள் நடைபெற்ற நிலையில், அதில் பெண்கள் பிரிவில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த மல்யுத்த வீராங்கனை ரெஹா ரெஃப்ளெ (Reha Ripley) வெற்றி அடைந்துள்ளார். ஆண்கள் பிரிவில் அமெரிக்காவை சேர்ந்த மல்யுத்த வீரர் & நடிகர் கோடி ரூத்ஸ் (Cody Rhodes) வெற்றி அடைந்துள்ளார். இது அவர்களின் ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.