அடக்கடவுளே... அதிரவைக்கும் பயங்கர சம்பவம்... அதிகப்படியான கார உணவை சாப்பிட்ட இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த சோகம்!!
அடக்கடவுளே... அதிரவைக்கும் பயங்கர சம்பவம்... அதிகப்படியான கார உணவை சாப்பிட்ட இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த சோகம்!!
சீனாவில் ஷங்ஹாயை பகுதியை சேர்ந்தவர் ஹூவாங். இவர் சம்பவத்தினத்தன்று அதிகப்படியான கார உணவை சாப்பிட்டுள்ளார். அவர் சாப்பிட்ட சில மணி நேரத்திலேயே பயங்கர இருமலால் அவதிப்பட்டுள்ளார். இவ்வாறு அவர் தொடர்ந்து இருமும் போது அந்த பெண்ணின் மார்பு பகுதியில் ஏதோ முறிந்ததை போன்ற சத்தம் கேட்டுள்ளது.
அதனை ஹூவாங் சாதாரணமாக கருதி விட்டுள்ளார். அதன்பிறகு ஹூவாங்கால் பேச முடியாமலும், மூச்சு விடுவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து ஹூவாங் உடனே மருத்துவரை அணுகியுள்ளார். அங்கு அவரை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
காரணம் அவரது நான்கு விலா எலும்புகள் முறிந்திருப்பது ஸ்கேனில் கண்டுபிடிக்கப்பட்டது. அதிகப்படியான கார உணவை சாப்பிட்டு விட்டு தொடர்ந்து இருமியதால் தான் இது போன்ற நிகழ்வு நடந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, அவரது மார்பகப் பகுதியில் ஒரு மாதத்திற்குக் கட்டுப் போட்டு ஓய்வெடுத்தால் மட்டுமே ஹூவாங் குணமடைவார் என மருத்துவர்கள் கூறி விட்டனர்.