#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"எல்லாம் விதி!!" கேப்டனாக 200-வது ஆட்டத்தில் களமிறங்கும் தோனியின் நெகிழ்ச்சியான வார்த்தைகள்!!
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த தொடரில் இதுவரை தோல்வியே சந்திக்காத இந்திய அணி இறுதிப்போட்டிக்கு ஏற்கனவே தகுதிபெற்று விட்டது. இறுதி போட்டிக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்தாலும் இந்த தொடரில் எதிரணிகளை கலங்கடித்த ஆப்கானிஸ்தான் இன்றும் இந்தியாவை கலங்கடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி சார்பில் 5 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கேப்டன் மற்றும் தொடக்க ஆட்டகாரரான ரோஹித் ஷர்மாவிற்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதால் இந்திய அணிக்கு மீண்டும் கேப்டனாகும் வாய்ப்பு தோனிக்கு கிடைத்துள்ளது. இது கேப்டனாக தோனி களமிறங்கும் 200-வது ஆட்டமாகும்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்கிறது.
200-வது ஒருநாள் போட்டிக்கு தலைமையேற்கும் தோனி அதனைப்பற்றி கூறுகையில், "என்னால் இதனை நம்ப முடியவில்லை. நான் கேப்டன் பதவியை ராஜினாமா செய்யும் பொது 200-வது போட்டியை முடித்திருக்கலாம் என்ற எண்ணம் இருந்தது. இப்பொது அது நிறைவேறியுள்ளது. எமக்கு விதியின் மேல் நம்பிக்கை உள்ளது. இதுவும் ஒரு விதி தான். எனக்கு மகிழ்ச்சியாய் இருக்கிறது" என்று கூறினார்.
இந்திய அணியுடனான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ்
இந்த போட்டிக்கான இந்திய அணி;
கே.எல் ராகுல், அம்பத்தி ராயூடு, மணிஷ் பாண்டே, தோனி, தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், சித்தார்த் கவூல், குல்தீப் யாதவ், கலீல் அஹமது.