தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
ஆசிய கோப்பை; விறுவிறுப்பான தருணங்கள்: பாகிஸ்தானை பந்தாடி வங்கதேசம் இறுதி போட்டிக்கு முன்னேறியது எப்படி!!
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் நேற்று பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் மோதின. இந்த தொடரில் இதுவரை தோல்வியே சந்திக்காத இந்திய அணி இறுதிப்போட்டிக்கு ஏற்கனவே தகுதிபெற்று விட்டது. இந்த ஆட்டத்தில் வெற்றிபெறும் அணி இறுதி போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ளும் என்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் இருந்தனர்.
இதில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
பாகிஸ்தான் அணியில் முகமது அமிர் நீக்கப்பட்டு ஜுனைத் கான் சேர்க்கப்பட்டிருந்தார். வங்கதேசம் அணியில் ஷாகிப் அல் ஹசன் நீக்கப்பட்டு ஹாக் சேர்க்கப்பட்டார்.
வங்கதேசம் அணி சார்பில் லிட்டோன் தாஸ், சவுமியா சர்கார் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஆட்டத்தின் மூன்றாவது ஓவரில் சவுமியா சர்கார் ரன் ஏதும் எடுக்காமல் ஜுனைத் கான் பந்தில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ஹாக் 5 ரன்னிலும் லிட்டோன் தாஸ் 6 ரன்னிலும் வெளியேற வங்கதேசம் அணி 12 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
4-வது விக்கெட்டுக்கு முஷ்பிகுர் ரஹிம் உடன் முகமது மிதுன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி வங்காள தேசத்தை சரிவில் இருந்து மீட்டது. இவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர்.
வங்காள தேச அணியின் எண்ணிக்கை 156 ஆகா இருக்கும்போது சிறப்பாக ஆடிய முகமது மிதுன் 60 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இருவரும் இணைந்து 4-வது விக்கெட்டுக்கு 144 ரன்கள் குவித்து அணியை மீட்டனர்.
அதன்பின் வந்த இம்ருல் கெய்ஸ் 9 ரன்னில் வெளியேறினார். 7-வது வீரராக மெஹ்முதுல்லா களம் இறங்கினார். அரைசதம் அடித்து நிதானமாக ஆடிக்கொண்டிருந்த முஷ்பிகுர் ரஹிம் சதத்தை நோக்கி முன்னேறினார். 99 ரன்கள் எடுத்திருத்திருந்த நிலையில் துரதிருஷ்டவசமாக ஷஹீன் அப்ரிடி பந்தில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். 7-வது விக்கெட்டுக்கு மெஹ்முதுல்லா உடன் மெஹிதி ஹசன் ஜோடி சேர்ந்தார்.
இருவரும் அடித்து விளையாடி விரும்பினார்கள். ஆனால் மெஹித் ஹசன் 11 பந்தில் 12 ரன்கள் எடுத்த நிலையிலும் மெஹ்முதுல்லா 25 ரன்கள் எடுத்த நிலையிலும் வெளியேறினர். 49-வது ஓவரில் இரண்டு விக்கெட்டுக்களை இழக்க வங்கதேசம் அணி 48.5 ஓவரிலேயே அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 239 ரன்கள் எடுத்தது.
பாகிஸ்தான் அணியின் ஜூனைத் கான் நான்கு விக்கெட்டுக்களும், ஷஹீன் அப்ரிடி, ஹசன் அலி தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.
240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாய் இருந்தது.
அந்த அணியின் பகர் சமான், இமாம் உல் ஹக் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். ஆரம்பத்தில் இருந்தே வங்கதேசம் அணியின் பந்து வீச்சில் அனல் பறந்தது. இதனால் பாகிஸ்தான் அணியினரின் விக்கெட்டுகள் தொடக்கத்தில் இருந்தே சீரான இடைவெளியில் சரியாய் துவங்கின.
முதல் ஓவரில் பகர் சமான் ஒரு ரன்னிலும், இரண்டாவது ஓவரில் பாபர் அசாம் ஒரு ரன்னிலும், நான்காவது ஓவரில் சர்ப்பிரஸ் அஹமது பத்து ரன்னில் தொடர்ந்து வெளியேறினர். இதனால் பாகிஸ்தான் அணி 18 ரன்களுக்கு 3 விக்கட்டுகளை இழந்து தடுமாறியது.
அடுத்து வந்த சோயப் மாலிக், இமாம் உல் ஹக் உடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறிது நேரம் நிலைத்து நின்றனர். ஆனால் 21 ஆவது ஓவரில் சோயப் மாலிக் 30 ரன்களில்வெளியேற, அவரை தொடர்ந்து சதாப் கானும் 4 ரன்களில் வெளியேறினார்.
அந்த அணியில் இமாம் உல் ஹக் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து அரைசதம் அடித்தார். அடுத்து வந்த ஆசிப் அலி 31 ரன்களில் அவுட்டானார். இவரைத்தொடர்ந்து அரைசதம் அடித்து சிறிது நம்பிக்கை கொடுத்து வந்த இமாம் உல் ஹக் 81 ரன்களில் வெளியேற பாகிஸ்தான் அணியின் தோல்வி உறுதியானது.
இதனால் பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 37 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசம் அணி வெற்றி பெற்று இந்த தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறியது.
வங்காளதேசம் அணி சார்பில் முஸ்தபிசூர் ரகுமான் 4 விக்கெட்டுகளும், மெஹித் ஹசன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் வங்காளதேசம் அணி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள இறுதி போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது.
இதோ போட்டியில் மீண்டும் பாகிஸ்தானை இந்தியா எதிர்கொள்ளும் என எதிர்பார்த்த இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது பாகிஸ்தான்.