மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அர்ச்சனாவை சீண்டிய விஷ்ணு.! வேடிக்கை பார்த்த ஹவுஸ் மெட்ஸ்.!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் விஷ்ணு முதல் 3 நாள் அடாவடியாக இருப்பதும், அதன் பிறகு வரும் 4 நாட்கள் அமைதியாக இருப்பதும் என்று ஒரு புதுவிதமான யுக்தியை கையாண்டு வருகிறார். இதற்கிடையே வைல்ட் கார்டு என்ட்ரியில் உள்ளே நுழைந்த விஜய் வர்மா விஷ்ணுவின் திட்டத்தை அனைவர் முன்னிலையிலும் அம்பலப்படுத்தி விட்டார். ஆகவே இந்த வாரம் யாரிடம் மோதலாம் என்று திட்டம் போட்ட விஷ்ணு, தற்போது அர்ச்சனாவிடம் தன்னுடைய வேலையை தொடங்கியிருக்கிறார்.
இந்த வாரம் நிக்சன் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டது விஷ்ணுவுக்கு விருப்பமே இல்லையாம். ஆகவே நேற்றிலிருந்து விஷ்ணு சற்று சிடுசிடுப்பாக இருக்கிறார். பூர்ணிமா உள்ளிட்டோரின் திட்டம் தெரியாமல் நேற்று நிக்சன் மீது புகார் வழங்கிய சலசலப்பை ஏற்படுத்தினார். அதே சமயத்தில் அர்ச்சனாவிடம் சற்றே தன்னுடைய சேட்டையை காட்டி இருக்கிறார்.
மேலும் இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அர்ச்சனா அழுததை குறிப்பிட்டு சென்ற வாரம் பேசினார். இதன் காரணமாக, அர்ச்சனாவிடம் நன்றாக வாங்கி கட்டிக் கொண்டார். விஷ்ணு இதெல்லாம் போதாதென்று இன்று காலை கொடுக்கப்பட்ட ஒரு டாஸ்க்கில் தேவையில்லாமல் இந்த வீட்டில் அஞ்சலி பாப்பா போல பலர் சுற்றி திரிகிறார்கள் என்று நக்கலாக சொன்னார்.
அந்த டாஸ்க் முடிவடைந்தவுடன் எல்லோரும் அவரவர் வேலையை பார்க்க சென்றுவிட்ட நிலையில், அர்ச்சனா மற்றும் விஷ்ணு உள்ளிட்ட இருவருக்கிடையே மிகப்பெரிய தகராறு ஏற்பட்டது. ஆனால் வீட்டின் மற்ற போட்டியாளர்கள் அவரவர் வேலையை பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்து விட்டனர்.
இதன் பிறகு விஷ்ணு பளார், பளார் என்று அறைந்து விடுவேன் என்று அர்ச்சனாவை பார்த்து சொல்கின்றார். அப்போது ரவீனா, பூர்ணிமா மற்றும் மாயா ஆகியோர் துள்ளிக்குதித்து நடனமாடிக் கொண்டிருக்கிறார்கள். பிரதீப் காரணமாக இந்த வீட்டிலிருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று தெரிவித்தவர்களில் இந்த மூவரும் மிகவும் முக்கியமான நபர்கள்.
பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக பேசும் இந்த நபர்களுக்கு விஷ்ணு அர்ச்சனாவை வசை பாடியது ஏனோ தவறாக தெரியவில்லை. சென்ற 2 வாரங்களாக அர்ச்சனாவை மகள் போல பாவித்து வந்த விசித்திராவும் இந்த விவகாரத்தில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். மேலும் அர்ச்சனா மீது தான் தவறு இருக்கிறது என்று விசித்ரா சொன்னது ஆச்சரியமான விஷயம் தான்.