மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஐயோ எல்லாம் போச்சு இவ்வளவு பெரிய அநீதி நடந்திருக்கு.! பிக்பாஸ் வீட்டிற்குள் கதறும் மாயா.!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி ஆரம்பமான சூழ்நிலையில், முதல் நாளிலிருந்து அந்த நிகழ்ச்சியில் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக விசித்ரா எல்லோருடனும் நட்போடு இருக்க வேண்டும் என்று நினைக்கிறார் என்பது அவருடைய நடவடிக்கைகளிலேயே தெரிகின்றது. ஆனாலும் மாயா குழு அவரை எதிர்த்து செயல்பட்டு வந்தது. அதன் பிறகு பிக்பாஸ் தரப்பில் வழங்கப்பட்ட பூகம்பம் விளையாட்டுக்கு பின்னர் மாயா மற்றும் விசித்ரா உள்ளிட்டோர் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், நடப்பு வாரம் அந்த வீட்டின் தலைவராக இருக்கும் நிக்ஸனின் செயல்பாடு யாருக்காவது அதிருப்தி அளித்தால், அவருடைய தலைவர் பதவி உடனடியாக பறிக்கப்படும், மேலும் நேரடியாக நாமினேட் செய்யப்படுவார் என்றும் பிக்பாஸ் தெரிவித்திருந்தார். இதனையடுத்து நிக்ஸனை வெளியேற்றுவதற்கான திட்டத்தை பூர்ணிமாவும், மாயாவும் வகுக்கத் தொடங்கினர். ஆனால், தற்போது நிக்ஸனுக்கு எதிராக மாயாவும், ஆதரவாக பூர்ணிமாவும் செயல்பட்டு வருகிறார்கள்.
இதற்கு நடுவே இன்று வெளியான ப்ரோமோவில் கூல் சுரேஷ் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கின்றார். அந்த சமயத்தில் மாயா, சுரேஷ் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து ரூல் பிரேக் செய்துவிட்டார். அவர் உள்ளே வரலாம் என்பதற்கு ஃப்ரூப் காட்டுங்க என்று கேட்கிறார். மேலும் காலையில் உங்கள் கண் முன் ரூல் பிரேக் நடக்கும்போது கூல் சுரேஷ் என்பதால், நீங்கள் கேட்கவில்லை என்பதுதான் என்னுடைய அநீதி என்று தெரிவித்தார் மாயா.
அதன் பிறகு ஒரே மழையா இருக்கு நான் உள்ளே வரட்டுமா? என்று மாயா கேட்க, உள்ளே வரக்கூடாது என்று நிக்ஸன் சொல்லிவிட்டதால், மாயா ஏன் என்று கேள்வி எழுப்புகிறார். அது ரூல் பிரேக் என நிக்சன் சொல்லிவிட்டார். ஆகவே மாயா தனக்கு அநீதி நடந்ததாக அந்த மணியை அடித்து விட்டு பெரிய ரூல் பிரேக் நடந்து விட்டது என்று தெரிவிக்கிறார். இத்துடன் அந்த ப்ரோமோ முடிவடைகிறது.