மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிக்பாஸ் சீசன் 7 இரு துருவங்களாக பிரிந்த பூர்ணிமா மாயா.! நிக்சனை வெளியேற்ற புது முயற்சியா.?
சென்ற அக்டோபர் மாதம் 1ம் தேதி ஆரம்பமான பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் அனைதினமும் தகராறு வெடித்து வருகின்றது. இதில் நிக்சன்,பூர்ணிமா, மாயா உள்ளிட்டோர் ஒரு குழுவாகவும், அர்ச்சனா, விசித்திரா உள்ளிட்ட இருவரும் ஒரு குழுவாகவும் மோதிக்கொண்டனர். இதன் பின்னர் பிக்பாஸ் வழங்கிய பூகம்பம் என்ற டாஸ்கையடுத்து மாயா மற்றும் விசித்திரா உள்ளிட்ட இருவரும் ஒன்றாக இணைந்து விளையாட தொடங்கினர்.
அதே நேரம் அர்ச்சனாவும், விசித்திராவும் எதிரெதிர் துருவங்களாக மாறிவிட்டனர். இதற்கு நடுவே சென்ற வாரம் இந்த வீட்டிற்கு மீண்டும் வருகை தந்தார். விஜய்வர்மா ஆகவே ஆர்.ஜே.பிராவோ இந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதோடு பூர்ணிமா மற்றும் மாயா உள்ளிட்ட இருவரையும் கமலஹாசன் கடுமையாக கண்டித்தார். இதனை தொடர்ந்து, கேப்டனாக செயல்பட்டு வரும் நிக்சனின் செயல்பாடு யாருக்காவது அதிருப்தியாக இருந்தால், அவருடைய தலைவர் பதவி பறிக்கப்படும் என்று பிக்பாஸ் தெரிவித்திருந்தார்.
அதோடு அவர் நேரடியாக நாமினேட் செய்யப்படுவார் என்றும் கூறப்பட்டது. ஆகவே அவரை இந்த வீட்டிலிருந்து வெளியேற்ற வேண்டிய வேலையை பார்ப்போம் என்று பூர்ணிமா மற்றும் மாயா உள்ளிட்ட இருவரும் ரகசிய திட்டத்தை வகுத்தனர். இதன் பின்னர் இன்று தங்களுடைய திட்டத்தை அவர்கள் செயல்படுத்தியிருக்கிறார்கள்.
தற்போது வெளியாகியிருக்கின்ற ப்ரோமோவில் பூர்ணிமா மற்றும் மாயா இருவரும் இரு துருவங்களாக பிரிந்து பேசிக் கொள்கிறார்கள். அதில் பூர்ணிமாவிடம் மாயா நீங்கள் நிக்சனை நல்லா காப்பாத்துறீங்க என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் பூர்ணிமாவோ உங்களுக்கு என்னங்க பிரச்சனை? என்று கேட்க, இருவரும் மாறி, மாறி பேசி கொள்கிறார்கள். நீங்க சொன்ன மாதிரியே நிக்சனை காப்பாத்துறிங்க என்று சொல்ல, விஷ்ணு நிக்சனுக்கு எதிராக மணி அடிப்பதற்காக செல்கின்றார். அத்துடன் இந்த புரோமோ முடிவடைகிறது.