Good Bad Ugly: அஜித் குமாரின் குட் பேட் அக்லீ படம்; ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
Biggboss-7: இதெல்லாம் நியாயமா ஆண்டவரே.! முதல்ல இதை பண்ணுங்க கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிக்பாஸ் சீசன்- 7 நிகழ்ச்சி தற்போது 50 நாட்களைக் கடந்து பரபரப்பாக ஓடி கொண்டிருக்கிறது. இந்த சீசனின் தொடக்கத்திலிருந்து பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடந்து வருகிறது. ஆனால், தற்போது இந்த பிக்பாஸ் வீட்டில் ரசிகர்களை எரிச்சலடைய செய்யும் பல்வேறு விஷயங்கள் நடைபெற்று வருகிறது. அதனை இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளரான கமல்ஹாசன் மற்றும் பிக்பாஸ் உள்ளிட்டோர் பெரிதாக கண்டு கொண்டது போல தெரியவில்லை.
கமல்ஹாசன் அவ்வப்போது விதிமீறல் தொடர்பாக பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு தெரிவிப்பார். அதிலும் சென்ற வாரம் பூர்ணிமா மற்றும் மாயா உள்ளிட்ட இருவரும் மைக்கை கழற்றி வைத்துவிட்டு ரகசியம் பேசுவதை அவர் கடுமையாக ஆட்சேபித்திருந்தார். ஆனாலும் அவர்கள் இருவருமே கமல்ஹாசனின் இந்த அறிவுறுத்தலை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
கமல்ஹாசன் எவ்வளவு தான் சொன்னாலும் நாங்கள் கேட்க மாட்டோம் அதைத்தான் செய்வோம் என்று விடாப்பிடியாக மீண்டும், மீண்டும் இருவரும் ஒரே தவறை செய்து வருகிறார்கள். இவர்கள் இருவர் மட்டும் தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டு வருவது ரசிகர்களை கோபமுற வைத்திருக்கிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளரும், பிக்பாஸும் இத்தனை முறை எச்சரிக்கை செய்தும் மீண்டும் இந்த வீட்டில் விதிமீறல் நடைபெறுகிறதென்றால், நிச்சயம் எந்த ஆதரவுமில்லாமல் எப்படி விதிமீறல் நடக்கும்? அதன்படி குழந்தையை கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டும் கதையாக தான் இருக்கிறது என்று ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
பிக்பாஸ் விதிகளை மீறி நடக்கும் இவர்களுக்கு தான் முதலில் ரெட் கார்டு கொடுத்திருக்க வேண்டும். ஆனால் இவர்கள் இருவரும் ஒன்றிணைந்து, பிரதீப்பை இந்த வீட்டிலிருந்து வெளியேற்றி விட்டார்கள் என்று ரசிகர்கள் கொந்தளித்து வருகிறார்கள். குறிப்பாக ரசிகர்கள் பூர்ணிமா மீது கடுமையான கோபத்திலிருப்பதாக தெரிகிறது.
அந்தளவிற்கு சமூக வலைதளத்திலும் பூர்ணிமாவுக்கு எதிராக ரசிகர்கள் கொந்தளித்து வருகிறார்கள். வில்லத்தனம், பொறாமை, மரியாதையின்றி பேசுவது என நாட்கள் செல்ல, செல்ல இவர் பெயர் கெட்டுப் போய்க் கொண்டே இருக்கிறது. அந்த விதத்தில், தற்போது அவர் செய்யும் செயலுக்கு கமல்ஹாசன் நிச்சயமாக ஒரு குட்டு வைக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.