மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்து இந்த வாரம் வெளியேறிய ஜோவிகாவின் சம்பளத்தை பார்த்து வாய் பிளந்த பிரபலங்கள்.!
விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சி ஆரம்பமான முதல் நாளிலிருந்து பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. நிகழ்ச்சி தொடங்கியபோது, 18 போட்டியாளர்கள் இந்த வீட்டிற்குள் வந்தனர். அதன் பிறகு நடத்தப்பட்ட நாமினேஷனில் அனன்யா ராவ் இந்த வீட்டிலிருந்து வெளியேறினார். அவர் தொடங்கி பல்வேறு போட்டியாளர்கள் இந்த வீட்டிலிருந்து வெளியேறினார்.
அதன் பிறகு தினேஷ், அன்னபாரதி, கானா பாலா, உள்ளிட்ட 6 பேர் வைல்ட் கார்டு என்ட்ரியாக வீட்டிற்குள் நுழைந்தனர். இதன் பிறகு தான் இந்த நிகழ்ச்சி இன்னும் சூடு பிடிக்க தொடங்கியது. அதன்பிறகு பல்வேறு சுவாரசியமிக்க சம்பவங்கள் இந்த வீட்டில் நடக்க தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா விஜயகுமார் அதிகம் பேசப்படும் போட்டியாளர்களில் ஒருவராக இருந்து வந்தார்.
பின்னர் படிப்பு விவகாரத்தில் ஜோவிகாவிற்கும், சக போட்டியாளரான விசித்ராவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதில் ஜோவிகா தனக்கு படிப்பு வரவில்லை. ஆனால் எனக்கிருக்கும் திறமையை கொண்டு நான் முன்னேற முயற்சிக்கிறேன் என்று தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையாக மாறியது.
இந்த சூழ்நிலையில்தான், இந்த வாரம் தினேஷ், விசித்ரா, கூல் சுரேஷ், ஜோவிகா விஜயகுமார், மணிச்சந்திரா, பூர்ணிமா உள்ளிட்டோர் நாமினேட் செய்யப்பட்டிருந்தனர். இதில், இந்த வாரம் யாரும் எதிர்பாராத விதமாக ஜோவிகா இந்த வீட்டை விட்டு வெளியேறினார். 60 நாட்களைக் கடந்து பிக்பாஸ் வீட்டிலிருந்த ஜோவிகாவிற்கு வாரம் 1க்கு 2 லட்சம் ரூபாய் என சம்பளம் பேசப்பட்டு இந்த வீட்டிற்குள் அனுப்பப்பட்டதாக சொல்லப்படுகிறது.