மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நான் என்ன செய்யணும்னு நீங்க சொல்லாதீங்க.! பிக்பாஸ் வீட்டாரை வறுத்தெடுத்த கமலஹாசன்.!
தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல சர்ச்சையான விஷயங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதோடு இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருக்கும் கமல்ஹாசன் ஒரு தரப்புக்கு ஆதரவாக தான் எப்போதும் செயல்பட்டு வருகிறார் என்ற விமர்சனமும் அடிக்கடி எழுகிறது.
பூர்ணிமா மற்றும் மாயா குழுவுக்கு தான் அவர் எப்போதும் ஆதரவாக செயல்பட்டு வருகிறார் என சமூக வலைதளங்கள் மூலமாக, கமல்ஹாசனை நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்ற சூழ்நிலையில், தற்போது முதல் முறையாக கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டிலிருப்பவர்களிடம் கோபமாக பேசியிருக்கிறார்.
அதாவது, இந்த வீட்டில் யாரும் எனக்கு favorite என யாரும் கிடையாது. இவர் தோல்வியடைய வேண்டும், இவர் வெற்றி பெற வேண்டும் என எனக்கு எந்த எண்ணமும் கிடையாது. நான் என்ன விமர்சிக்க வேண்டும் என்று நீங்கள் முடிவு எடுக்க இயலாது. நான் உங்க கூட விளையாட வரல, முடிந்தால் உங்கள் வாழ்க்கையை மேம்படுத்த தான் வந்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும் யாரும் இங்கே பொதுநலனுக்காக இல்லை நான் உட்பட அனைவரும் ஊதியம் வாங்குகின்றோம். அந்த கடமைக்காக சரியாக செயல்படுங்கள். நான் என்ன பேசணும் என நீங்க எனக்கு டயலாக் எழுதிக் கொடுக்காதீங்க, என்று கமல்ஹாசன் பிக்பாஸ் போட்டியாளர்களை கடுமையாக தாக்கி பேசியிருக்கின்றார்.
இதற்கு நடுவே, கமலஹாசன் பேசி விட்டு சென்ற பிறகு பேசிய பூர்ணிமா, கேப்டன் பதவியை அதிகார துஷ்பிரயோகம் செய்தேன் என்று என்னை மட்டும் அவர் திட்டினார். ஆனால், தினேஷ் விஷயத்தைக் கேட்கவே இல்லையே என்று கூறினார். இதனை விமர்சித்து தான் இன்று கமல்ஹாசன் கோபமாக பேசியுள்ளார்.