மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிக்பாஸ் சீசன் 7 அடுத்தடுத்த சர்ச்சை.! வெளியேறுகிறாரா கமல்ஹாசன்.?
சென்ற 2017 ஆம் வருடம் பிரம்மாண்டமான முறையில், விஜய் டிவி சார்பாக பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி தற்போது வரையில் 7 சீசன்களாக வெற்றிகரமான முறையில் நடந்து வருகிறது.
ஆனால், இதுவரையில் ஒளிபரப்பான எந்த சீசனிலுமில்லாத அளவிற்கு தற்போது ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியின் 7வது சீசன் மூலமாக கமல் சர்ச்சையில் சிக்கியிருக்கின்றார். அதிலும் குறிப்பாக பிரதீப் விவகாரத்தில் கமல் செய்தது தொடர்பாக ரசிகர்கள் பலரும் அவருக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அதேபோல சமூக வலைதளவாசிகள் பலரும் கமல்ஹாசனை கிண்டல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தான், கமல்ஹாசன் ஒரு அதிரடி முடிவை மேற்கொண்டிருக்கிறார். அதாவது, இனிவரும் அடுத்தடுத்த பிக்பாஸ் சீசன்களை
அவர் தொகுத்து வழங்கப்போவதில்லை என்று கூறப்படுகிறது. ஆகவே பிக்பாஸ் நிகழ்ச்சியின் நடப்பு சீசன் தான் அவருடைய கடைசி சீசன் என்று சொல்லப்படுகிறது.
ஆகவே பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசனை மற்றொரு நட்சத்திரம் தான் தொகுத்து வழங்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இது உண்மையான தகவல் தானா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.