மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குடிகார அங்கிள் கமலை வெளுத்து வாங்கிய பூர்ணிமா.!
தற்போது பிக்பாஸ் வீட்டிற்கு பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாக தெரிகிறது. இதற்கு முன்னர் நடந்த இந்த நிகழ்ச்சியின் எந்த சீசன்களிலும் இப்படியான விதிமுறை மீறல்கள் நடந்ததே இல்லை என்றும் சொல்லப்படுகிறது.ஒருபுறம் பூர்ணிமா மற்றும் மாயா உள்ளிட்ட இருவரும் விதிமீறல்களை நிகழ்த்தினால் இன்னொரு புறம் அர்ச்சனாவும், விசித்ராவும் விதிமுறைகளை மீறுவது பிரச்சனையை ஏற்படுத்தியிருப்பதாக தெரிகிறது
இந்த நிலையில் தான் இந்த விதி மீறல்களை கமலஹாசன் தொடர்ந்து கண்டித்து வருவதாக சொல்லப்படுகிறது. இன்னொரு புறம் தரக்குறைவான வார்த்தைகளை பிரயோகிப்பது தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிற்குள் நடைபெற்று வருகிறது.
முதலில் ஒரு போட்டியாளர் இன்னொரு போட்டியாளரை குறிப்பிட்டு தரக்குறைவான வார்த்தைகளை பிரயோகித்து பேசி வருவது தொடர் கதையாக இருந்து வந்தது. ஆனால் தற்போது இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளரான கமல்ஹாசனுக்கும் இதே நிலை ஏற்பட்டுள்ளது. நேற்றைய தினம் பூர்ணிமாவும், விக்ரமும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது சென்ற வாரம் தன்னை கமல்ஹாசன் தொடர்ந்து கேள்வி கேட்டது தொடர்பாக ஆதங்கத்தோடு பூர்ணிமா பேசினார். இதில் கமல்ஹாசனை குறிப்பிட்டு குடிகார அங்கிள் என தெரிவித்துள்ளார் பூர்ணிமா. இதை கவனித்த ரசிகர்கள் அந்த வீடியோவை மட்டும் கட் செய்து வைரலாக்கி வருகிறார்கள்.