கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
இன்று ரிஸ்க் எடுத்து நாளை மகிழ்ச்சியுடன் இருங்கள் - வாழ்க்கையில் முன்னேற ஆனந்த் ஸ்ரீனிவாசன் அட்வைஸ்..!
எனது கோபத்தை அடக்கியிருந்தால் 10 ஆண்டுகளில் பல சாதனை செய்திருப்பேன். இளம் தலைமுறை இன்று கஷ்டப்பட்டால் தான் நாளை நலன் பெறுவீர்கள் என ஆனந்த் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
பொருளாதார ரீதியாக பல ஆலோசனைகளை இளம் தலைமுறைக்கு வழங்கியதால், சமூக வலைத்தளங்களில் பிரபலமடைந்தவர் ஆனந்த் ஸ்ரீனிவாசன். இவர் தனது வாழ்நாட்களில் திட்டமிடலுடன் செயல்பட்டு இன்று சாதனை மனிதராக இருந்தாலும், அவரின் ஆலோசனைகள் கட்டாயம் தேவைப்படும் ஒன்றாகவே இருக்கிறது.
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "2022 முடிவுக்கு வருகிறது. நான் இன்று நல்ல நிலையில் இருக்கிறேன் என்றால், அன்று நான் சந்தித்த கஷ்டங்கள் மற்றும் எதிர்கொண்டு வென்ற சாதனைகள் மட்டுமே காரணம் ஆகும். இன்று நீங்கள் முயற்சி செய்யாமல் இருந்தால் 10 ஆண்டுகள் கழித்து கஷ்டப்படுவார்கள். இன்று கஷ்டப்பட்டால் நாளை நலமுடன் இருப்பீர்கள்.
நாம் கற்றது கையளவு, கல்லாதது கடலளவு. எனக்கு தெரிந்ததை உங்களுக்கு கூறுகிறேன். எனக்கு தெரியாத விஷயங்கள் கடல் அளவு இருக்கிறது. கடந்த 1978ல் நான் பூணூல் போட்டபோது Encyclopedia புத்தகம் கொடுத்தார்கள்.. அதனை எதோ ஒரு ஆர்வத்தில் படித்துவிட்டேன். அன்று படிக்க தொடங்கிய பழக்கம் இன்று வரை விடவில்லை.
இன்றளவில் நாம் எடுக்கும் கடும் முயற்சியே 10 ஆண்டுகள் கழித்து நம்மை நல்ல நிலையில் வைத்திருக்கும். நாம் கஷ்டப்பட தயாராக இருக்க வேண்டும். பலரும் என்னை ஜீனியஸ் என்று கூறுகிறார்கள். வாழ்க்கையில் ஜீனியஸ் பைத்தியம் பிடித்து பாயை சுரண்டுவார்கள். அவை நமக்கு வேண்டாம். நமக்கு கொஞ்சம் அறிவு இருந்தால் போதும்.
என்னுடைய கோபத்தை நான் கண்ட்ரோலுக்கு கொண்டு வர 40 வயது ஆகிவிட்டன. 10 ஆண்டுகளுக்கு முன்பு அதை நான் செய்திருந்தால் இன்று இன்னும் நல்ல நிலையில் இருந்திருப்பேன். ஜீனியஸை பார்த்து பொறாமைப்பட வேண்டாம். அவை வேறு மாதிரியான உலகம். உங்களுக்கு தேவையான மதிநுட்பம் இருந்தால் போதும்.
வாழ்க்கையில் எவ்விதமான சூழ்நிலையில் இருந்தால் முன்னேறுவோம் என்பதை சிந்தித்து செயல்படுங்கள். உங்களுக்கு எந்த இடம் பிடிக்காதோ அங்கு இருந்தால் தான் அங்கிருந்து வெளியேற எண்ணி தீவிரமாக உங்களை முன்னேற்றுவீர்கள். வாழ்க்கையில் ஜெயித்துவிடுவீர்கள். அங்கிருந்து உடனடியாக எஸ்கேப் என்ற எண்ணத்தில் இருந்தால் கட்டாயம் கஷ்டம் தான். அதனால் நினைவில் வைத்து செயல்படுங்கள்" என்று தெரிவித்தார்.
நன்றி: திரு. ஆனந்த் ஸ்ரீனிவாசன், பொருளாதார நிபுணர் & ஆலோசகர்.