பப்ஜி விளையாடுவதை கண்டித்ததால் சகோதரி கொலை: தம்பியின் வெறிச்செயல்.!



Pakistan Muzhafargarh Sisters Killed by Brother 

 

பாகிஸ்தானில் உள்ள ஜாங்கின் அதாரா ஹசாரி தெஹ்சில் பகுதியில், பப்ஜி விளையாடுவதை கண்டித்த சகோதரி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பப்ஜி கேம் விளையாடுவதை கண்டித்த காரணத்தால் கொலை சம்பவம் நடந்துள்ளது. 

கடந்த ஜூலை மாதம் இதனைப்போலவே கொடூர சம்பவம் நடந்தது. முசாபர்கர்க், தெர்மல் பவர் காலனி பகுதியில் வசித்து வரும் நபர் எஜாஸ். இவரது மகள்கள் பாத்திமா, சாரா, அரீஜா. மகன் பாசித். 

இவர் ராணுவத்தில் படைவீரராக வேலை பார்த்து வருகிறார். பப்ஜி விளையாட்டு மோகம் கொண்ட அடிமையாக இருந்த பாசித், வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே எந்த நேரமும் கேம் விளையாடி வந்துள்ளார். 

இதனை அவரின் சகோதரிகள் கண்டித்ததாக தெரிய வருகிறது. கடந்த ஜூலை மாதம் பாசித் தனது மூன்று சகோதரிகளையும் கொலை செய்திருக்கிறார். அவர்களின் உடலை மறைத்து வைத்துவிட்டு, காவல் நிலையத்தில் சகோதரிகள் மாயமாகி விட்டதாக புகார் அளித்துள்ளார். 

காவல்துறையினர் கடந்த பத்து நாட்களாக தீவிர விசாரணை மேற்கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில், விசாரணைக்கு பின் பாசித் மீது சந்தேகம் திரும்பி நடந்த கிடுக்குபிடி விசாரணையில் கொலை செய்தது உறுதியாகவே, அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். 

விசாரணையில், சகோதரிகள் மூவரும் பப்ஜி விளையாடுவதை கண்டித்ததால் ஆத்திரத்தில் கொலை செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார். விசாரணைக்கு பின்னர் பாசித் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த துயரத்தை போல தற்போது பப்ஜி விளையாடுவதை கண்டித்த சகோதரி கொலை செய்யப்பட்டுள்ள பயங்கரம் நடந்துள்ளது.