மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரபல நடிகரின் பண்ணை வீட்டில் 10 வயது சிறுமிக்கு நேர்ந்த அவலம்! வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சி சம்பவம்!!
மைசூருவில், பிரபல கன்னட நடிகர் தர்ஷனுக்கு சொந்தமான பண்ணை தோட்டத்தில் 10 வயது சிறுமி அங்கு வேலைப் பார்த்தவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல கன்னட நடிகர் தர்ஷனுக்கு சொந்தமான பண்ணை வீடு மைசூரு டி.நரசிப்புரா சாலையில் அமைந்துள்ளது. அங்கு நடிகர் தர்ஷன் ஏராளமான குதிரைகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் குதிரைகளை கவனித்துக் கொள்வதற்காகவும், பண்ணைத் தோட்டத்திலும் ஏராளமானவர்கள் வேலை பார்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில் அங்கு குதிரை பராமரிப்பாளராக வேலை பார்த்து வந்த பீகாரை சேர்ந்த நசீம் என்பவர் அதே பண்ணையில் வேலை பார்த்து வந்த மற்றொரு தொழிலாளியின் 10 வயது மகளை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் இதுகுறித்து வெளியே சொல்லக் கூடாது எனவும் மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்நிலையில் பயந்துபோன அந்த சிறுமி இதுகுறித்து அவரது பெற்றோரிடம் கூறிய நிலையில் அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நசீமை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.